திங்கள், 24 ஜனவரி, 2011

ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் காடுவெட்டி குரு போட்டி: ராமதாஸ்

அரியலூர்: 

          அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

             வரும் சட்டசபை தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், இந்த தொகுதி பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச்செய்வது உங்கள் கடமை. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

               கிராமத்துக்கு வேண்டிய அடிப்படை தேவை கிடைக்க பாடுபட்டால் கட்சி வலுவாக இருக்கும். ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை நானே முன்னின்று காடுவெட்டி குரு தலைமையில் நடத்துவேன் என்றார்.


Read more...

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP