வியாழன், 31 மார்ச், 2011

காஞ்சிபுரம் மாவட்டத்தில்ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமிடம் அறிவிப்பு

காஞ்சிபுரம் : 

                காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள், 7 மையங்களில் எண்ணப்பட உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 

சோழிங்கநல்லூர், 
ஆலந்தூர், 
பல்லாவரம், 
ஸ்ரீபெரும்புதூர் (தனி), 
தாம்பரம், 
செங்கல்பட்டு, 
 திருப்போரூர், 
செய்யூர்(தனி), 
மதுராந்தகம்(தனி), 
உத்திரமேரூர், 
காஞ்சிபுரம் 

                என 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் ஓட்டுகள் மே 13ம் தேதி, எண்ணப்பட உள்ளன. 

               சோழிங்கநல்லூர் தொகுதி ஓட்டுகள் மேடவாக்கம் சாலையில் உள்ள முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரியிலும், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் தொகுதி ஓட்டுகள் புனித தோமையார் மலைப் பகுதியில் உள்ள மான்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி ஓட்டுகள் தண்டலம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன. தாம்பரம் தொகுதி ஓட்டுகள் சென்னை கிறிஸ்தவ கல்லூரி, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதி ஓட்டுகள் வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரி, செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதி ஓட்டுகள் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் எண்ணப்பட உள்ளன. 

                 ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு சீலிடப்பட்ட அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்படும். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியை நேற்று, தேர்தல் பார்வையாளர்கள் அலோக்குப்தா, கிருஷன்குமார், காவல் பார்வையாளர் அலோக்ரஞ்சன், கலெக்டர் அஷிஷ்சட்டர்ஜி, எஸ்.பி., பிரேம்ஆனந்த் சின்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Read more...

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


புவனகிரி: 

அறிவுச்செல்வன் (பா.ம.க) மாம்பழம், 
சாமி (பி.எஸ்.பி) யானை, 
செல்விராமஜெயம் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
கமலக்கண்ணன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
திருவரசமூர்த்தி (ஐக்கிய ஜனதாதளம்) அம்பு, 
பழனிவேல் (புரட்சி பாரதம்) மெழுகுவர்த்திகள், 
முத்து (ஜார்கண்ட் முக்தி மோட்சா) வில் மற்றும் அம்பு, 

சுயேச்சைகள் 

கணேசன்-தபால் பெட்டி, 
சவுந்தர்ராஜன் - தொலைக்காட்சி பெட்டி, 
தனராசு -தையல் இயந்திரம்,
பன்னீர்செல்வம் - சீமாட்டி பணப்பை, 
மணி - கேக், 
முருகவேல்- முரசு.

Read more...

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


குறிஞ்சிப்பாடி: 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பன்னீர்செல்வம் (தி.மு.க) உதயசூரியன், 
பிரேமலதா (பி.எஸ்.பி) யானை, 
வைரக்கண்ணு (பா.ஜ.க) தாமரை, 

சுயேச்சை 

பன்னீர்செல்வம்-இறகுபந்து.

Read more...

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்பண்ருட்டி: 

ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 

சுயேச்சைகள் 

குப்புசாமி - தபால் பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட் மட்டை, 
வேல்முருகன் -அலமாரி.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்நெய்வேலி: 

கற்பகம் (பா.ஜ) தாமரை, 
சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம், 
இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
குமார் (ஐ.ஜே.கே) மோதிரம், 
லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சந்திரா-மின் கல விளக்கு, 
குமரகுரு- ரம்பம், 
பாண்டியன்-முரசு.

Read more...

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

திட்டக்குடி (தனி):

தங்கமணி (பி.எஸ்.பி) யானை, 
இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும் அம்பு, 
கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிந்தனைச்செல்வன் (வி.சி) மெழுகுவர்த்தி, 
தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

உலகநாதன் - கிரிக்கெட் மட்டை, 
சுமன்- தையல் இயந்திரம், 
தனசேகர் - காஸ் சிலிண்டர்,
பழனியம்மாள் - கூடை, 
முத்துகுமார் - கூரை மின் விசிறி.

Read more...

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

விருத்தாசலம்: 

அருட்செல்வம் (பி.எஸ்.பி) யானை, 
நீதிராஜன் (காங்) கை, 
பழமலை (பா.ஜ) தாமரை, 
கிருஷ்ணமூர்த்தி (ஐ.ஜெ.கே) மோதிரம், 
முத்துகுமார் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

அருண்குமார் - வயலின், 
சந்தானமூர்த்தி - தேங்காய், 
சுலோச்சனா- மெழுகுவர்த்திகள், 
ராஜேந்திரன்- கூடை.

Read more...

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


சிதம்பரம்:

ஸ்ரீதர் வாண்டையார் (தி.மு.க) உதயசூரியன், 
கண்ணன் (பா.ஜ) தாமரை,
செல்லையா (பி.எஸ்.பி) யானை, 
பாலகிருஷ்ணன் (மா.கம்யூ) சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், 
பன்னீர் (லோக் ஜன சக்தி) பங்களா,

சுயேச்சைகள் 

வினோபா- காஸ் சிலிண்டர், 
சத்தியமூர்த்தி- பட்டம், 
அருள்பிரகாசம்- அலமாரி, 
சங்கர்-தொலைக்காட்சிபெட்டி

Read more...

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

காட்டுமன்னார்கோவில் (தனி): 

பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, 
முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, 
மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், 
ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி, 

சுயேச்சைகள் 

அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, 
நந்தகுமார் - பட்டம்,
முருகானந்தம் - வயலின்.

Read more...

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

கடலூர்: 

குணசேகரன் (பா.ஜ) தாமரை, 
சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன், 
சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சக்திதாசன் -பட்டம், 
ராஜன்-மோதிரம்.

Read more...

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: களத்தில் 2,773 வேட்பாளர்கள்
               தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.மொத்தமாக 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். 
 
                  தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி மனு தாக்கல் முடிந்தது.தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 228 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் பணி கடந்த திங்கள்கிழமை நடந்தது.மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டு இருந்தார். 
 
             மனுக்களில் அவர் கையெழுத்திடவில்லை என மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து, ஜெயந்தியின் மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த கே.வீ.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளர் ஆனார். இதேபோன்று, வேதாரண்யம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சதாசிவத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக, அதே கட்சியைச் சேர்ந்த சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 4 ஆயிரத்து 228 வேட்பு மனுக்களில் 1,153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
 
வேட்புமனுக்கள் வாபஸ்: 
 
                  பல தொகுதிகளில் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குப் போட்டியாக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.போட்டியாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஹசீனா சையத் வாபஸ்: 3,075 மனுக்களில் 313 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான புதன்கிழமையின் கடைசி நேரத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசீனா சையத் தனது மனுவை வாபஸ் பெற்றதால் மாற்று வேட்பாளரான அவரது கணவர் சையத் கியாஸ் வேட்பாளரானார்
 
.கை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு: 
 
              ஆனால், சையத் கியாஸýக்கு "கை' சின்னம் ஒதுக்குவதற்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளருக்கு அதே சின்னம் ஒதுக்கப்படும். ஹசீனா வாபஸ் பெற்றுள்ளதால் சையத்துக்கு "கை' சின்னம் ஒதுக்கக் கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து இப் பிரச்னை குறித்து வியாழக்கிழமை காலை முடிவு எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் விவரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:
 
                பேரவைத் தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர். 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
 
அதிகபட்ச வேட்பாளர்: 
 
                அதிகபட்சமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
 
               திருப்பூர் வடக்குத் தொகுதியில் மொத்தமாக 151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 60 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
 
               ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தொலைபேசி வழியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. படிவம் 7-"ஏ'வை சரிபார்த்தபின்புதான் துல்லியமான தகவல் வியாழக்கிழமை கிடைக்கப் பெறும் என பிரவீண் குமார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
                தே.மு.தி.க.வுக்கு முரசு: மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
                   விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.41 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளைத் தவிர்த்து, இதர தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சைகளுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read more...

தமிழகத்தில் ஏப்ரல் 13ந் தேதி பொதுவிடுமுறை: பிரவீண்குமார்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
                   தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2011 க்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 13ந் தேதி நடைபெறுகிறது. செலாவணி முறிச்சட்டம் 1881 ன் பிரிவு 25ன் கீழ் அன்றைய தினம் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை அல்லது வணிக பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 135 பி ன்படி, ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 13 அன்று ஊதியத்துடன்கூடிய விடுப்பு அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவார்கள்.  இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more...

செவ்வாய், 29 மார்ச், 2011

அ..தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு


2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க.

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
 அ.தி.மு.க.  கூட்டணிபோட்டி 
 அ.தி.மு.க. 160
 தே.மு.தி.க. 41
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12
 இந்திய கம்யூனிஸ்ட் 10
 மனிதநேய மக்கள் கட்சி 3
 புதிய தமிழகம் கட்சி 2
 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 2
 அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் 1
 இந்திய குடியரசு கட்சி 1
 அகில இந்திய பார்வர்டு பிளாக்  1
 கொங்கு இளைஞர் பேரவை 1

Read more...

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
 


தி.மு.க. கூட்டணி போட்டி 
 தி.மு.க. 119
 காங்கிரஸ் 63
 பா.ம.க. 30
 விடுதலை சிறுத்தைகள் கட்சி 10
 கொங்கு நாடு முன்னேற்ற கழகம் 7
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3
 மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1
 பெருந்தலைவர் மக்கள் கட்சி 1

Read more...

ஞாயிறு, 27 மார்ச், 2011

சுயேச்சைகளுக்கு 53 சின்னங்கள் தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு     தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்காக 53 சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்கள் அல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 53 சின்னங்கள் வருமாறு: 

அலமாரி, 
பலூன், 
கூடை, 
கிரிக்கெட் மட்டை, 
மட்டைபந்தடி வீரர், 
மின்கல விளக்கு, 
கரும்பலகை, ரொட்டி, 
கைப்பெட்டி,
ப்ரஷ், 
கேக், 
புகைப்படக் கருவி, 
மெழுகுவர்த்தி,
கேரட், 
கூரை மின்விசிறி, 
கோட்டு, 
தேங்காய், 
கட்டில், 
கப் அண்ட் சாசர், 
டீசல் பம்ப், 
சிவிகை, 
மின் கம்பம், 
சிறுமியர் சட்டை, 
வாணலி, 
காஸ் சிலிண்டர், 
காஸ் அடுப்பு, 
கண்ணாடி தம்ளர், 
ஆர்மோனியம்,
தொப்பி, 
ஐஸ்கிரீம், 
இஸ்திரி பெட்டி, 
கூஜா, 
கொதக்கென்டி, 
பட்டம், 
சீமாட்டி பணப்பை, 
கடிதப் பெட்டி, 
முரசு, 
ப்ரஷர் குக்கர், 
மோதிரம், 
சாலை உருளை,
ரம்பம், 
கத்தரிக்கோல், 
தையல் இயந்திரம், 
இறகு பந்து, 
சிலேட், 
ஸ்டூல், 
மேசை, 
மேசை விளக்கு, 
 தொலைக்காட்சிப் பெட்டி, 
கூடாரம், 
 வயலின், 
ஊன்றுகோல், 
ஊதல் ஆகியவையாகும்.
 
                  இவற்றில் சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

Read more...

சனி, 26 மார்ச், 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம்: தொல்.திருமாவளவன்

           2011 சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

          திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் முகமது யூசப் அறிமுகப்படுத்தும் கூட்டம், அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய தொல்.திருமாவளவன், 

              திமுக கூட்டணியில் பாமகவுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கியுள்ளது என்றார்.

Read more...

புதன், 23 மார்ச், 2011

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல்வெளியீடு


   2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில்  திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதற்கான வேட்பாளர்களை இன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார்.

விபரம் 


1. திருத்தணி  சதா சிவலிங்கம்
2. பூவிருந்தவல்லி (தனி)  
3. ஆவடி   ஆர். தாமோதரன்

சென்னை மாவட்டம்

4. திரு.வி.க.நகர் (தனி)   சி.நடேசன்
5. ராயபுரம்   ஆர். மனோ
6. அண்ணா நகர்   வி.கே. அறிவழகன்
7. தியாகராயநகர்   செல்வகுமார்
8. மைலாப்பூர்   ஜெயந்தி தங்கபாலு

காஞ்சீபுரம் மாவட்டம்

9. ஆலந்தூர்   காயத்திரி தேவி
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)   டி.யசோதா
11. மதுராந்தகம் (தனி)   ஜெயக்குமார்

வேலூர் மாவட்டம்

12. சோளிங்கர்   அருள் அன்பரசு
13. வேலூர்   ஜான சேகரன்
14. ஆம்பூர்   ஜே. விஜய இளஞ்செழியன்

கிருஷ்ணகிரி மாவட்டம்

15. கிருஷ்ணகிரி   ஹெசினா சயித்
16. ஓசூர்   கோபிநாத்

திருவண்ணாமலை மாவட்டம்

17. செங்கம் (தனி)   செல்வ பெருந்தொகை
18. கலசப்பாக்கம்   சி.எஸ். விஜய குமார்
19. செய்யார்   எம்.கே. விஷ்ணுபிரசாத்

விழுப்புரம் மாவட்டம்

20. ரிஷிவந்தியம்   சிவராஜ்

சேலம் மாவட்டம்

21. ஆத்தூர் (தனி)   அர்த்த நாரி
22. சேலம் வடக்கு   ஜெயபிரகாஷ்

நாமக்கல் மாவட்டம்

23. திருச்செங்கோடு   ஆர்.எம்.சுந்தரம்

ஈரோடு மாவட்டம்

24. ஈரோடு மேற்கு   யுவராஜ்
25. மொடக்குறிச்சி   பழனிசாமி

திருப்பூர் மாவட்டம்

26. காங்கேயம்   விடியல் எஸ். சேகர்
27. அவினாசி (தனி)   ஏ.ஆர். நடராஜன்
28. திருப்பூர் தெற்கு 

நீலகிரி மாவட்டம்

29. உதகமண்டலம்   கணேசன்

கோவை மாவட்டம்

30. தொண்டாமுத்தூர்  எம்.எஸ்.கந்தசாமி
31. சிங்காநல்லூர்  மžரா ஜெயகுமார்
32. வால்பாறை (தனி)   கோவை தங்கம்

திண்டுக்கல் மாவட்டம்

33. நிலக்கோட்டை (தனி)   ராஜாங்கம்
34. வேடசந்தூர்   தண்டபானி

கரூர் மாவட்டம்

35. கரூர்   ஜோதி மணி

திருச்சி மாவட்டம்

36. மணப்பாறை  டாகர். சுப. சோமு
37. முசிறி   எம். ராஜ சேகரன்

அரியலூர் மாவட்டம்

38. அரியலூர்   பாலை தீ அமரமூர்த்தி

கடலூர் மாவட்டம்

39. விருதாசலம்   நீதிராஜன்

நாகை மாவட்டம்

40. மயிலாடுதுறை   எஸ். ராஜ்குமார்

திருவாரூர் மாவட்டம்

41. திருத்துறைப்பூண்டி (தனி)   சி. செல்லத்துரை

தஞ்சை மாவட்டம்

42. பாபநாசம்   ராம்குமார்
43. பட்டுக்கோட்டை   என்.ஆர். ரங்கராஜன்
44. பேராவூரணி   கே. மகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம்

45. திருமயம்   ராம சுப்புராவ்
46. அறந்தாங்கி   எஸ். திருநாவுக்கரசர்

சிவகங்கை மாவட்டம்

47. காரைக்குடி   கே.ஆர். ராமசாமி
48. சிவகங்கை   வி.ராஜசேகரன்

மதுரை மாவட்டம்

49. மதுரை வடக்கு   ராஜேந்திரன்
50. மதுரை தெற்கு   எஸ்.பி.வரதராஜன்
51. திருப்பரங்குன்றம்   சி.ஆர்.சுந்தர ராஜன்

விருதுநகர் மாவட்டம்

52. விருதுநகர்   நவீன் ஆம்ஸ்ராங்

ராமநாதபுரம் மாவட்டம்

53. பரமக்குடி (தனி)   ரா.பிரபு
54. ராமநாதபுரம் 

தூத்துக்குடி மாவட்டம்

55. விளாத்திகுளம்   பெருமாள்சாமி
56. ஸ்ரீவைகுண்டம்   சுடலையாண்டி

நெல்லை மாவட்டம்

57. வாசுதேவநல்லூர் (தனி)   எஸ்.கணேசன்
58. கடையநல்லூர்   பீட்டர் அல்போன்ஸ்
59. நாங்குனேரி   வசந்தகுமார்
60. ராதாபுரம்   வேல்துரை

கன்னியாகுமரி மாவட்டம்

61. குளச்சல்   ராபர்ட் புரூஸ்
62. விளவங்கோடு   விஜய தரணி
63. கிள்ளியூர்   ஜான் சேக்கப்

Read more...

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.வரதன் வரலாறு

தொகுதி: மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி 

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ஆர்.வரதன் 

வயது : 52 

கல்வி : 6-ம் வகுப்பு 

வசிப்பிடம் : கீழவலம் கிராமம் 

தொழில் : விவசாயம் 

சமூகம் : ஆதிதிராவிடர் 

கட்சிப் பொறுப்பு : மாவட்ட துணைச் செயலாளர் 

குடும்பம் : 

மனைவி சுலோச்சனா 

மகன் அரிதாஸ் 

மகள் வளர்மதி

Read more...

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் வரலாறு

தொகுதி: திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

கட்சி : பா.ஜ.க.

பெயர் : ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் 

வயது : 55 

கல்வி : பி.ஏ. 

சொந்த ஊர் : பொன்னேரி அருகே மேட்டுப்பாளையம் 

தொழில் : விவசாயம் 

சமூகம் : கம்மவார் நாயுடு 

கட்சிப் பொறுப்பு : மாவட்டத் தலைவர் 

குடும்பம் : 

மனைவி - உஷா 

மகன் -அஷ்வமேத் 

மகள் - சாம்பவி 


Read more...

செஞ்சி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் வரலாறு

தொகுதி: செஞ்சி சட்டமன்றத் தொகுதி 

கட்சி : பா.ஜ.க. 

பெயர் : எம்.எஸ்.ராஜேந்திரன் 

வயது : 36 

கல்வி : 8-ம் வகுப்பு 

சொந்த ஊர் : செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் 

தொழில் : விறகு மண்டி 

சமூகம் : வன்னியர் 

கட்சிப் பொறுப்பு : மாவட்டச் செயலாளர்

குடும்பம் : 

மனைவி - ஆர்.விமலா

மகள்கள் - ஆர்.ரம்யா, ஆர்.சந்தியா 

Read more...

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.வெங்கடேசன் வரலாறு

தொகுதி: திருக்கோவிலூர்  சட்டமன்றத் தொகுதி 

கட்சி : தே.மு.தி.க. 
பெயர் : எல்.வெங்கடேசன் 
வயது : 43 
கல்வி : பி.ஏ. 

சொந்த ஊர் : காங்கேயனூர் (காணை ஒன்றியம்) 
தொழில் : இயற்கை உரம் தயாரித்தல்
சமூகம் : நாயுடு 
கட்சிப் பொறுப்பு : மாவட்டச் செயலாளர் 
குடும்பம் : 
மனைவி -ஜெயந்தி 
மகன்கள் -அனிருத்ராகவ், விஷ்ணுராகவ்  


Read more...

தியாகராய நகரில் டிராபிக் ராமசாமி போட்டி


            சென்னை தியாகராய நகரில் போட்டியிட டிராபிக் ராமசாமி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.  தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது.  சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி, சிவசேனா கட்சி சார்பில் சதீஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். 

Read more...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.  

             கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே. பாலபாரதி திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அரூர் (தனி) தொகுதியில் பி. டில்லிபாபு, விளவங்கோடு தொகுதியில் ஆர். லீமாரோஸ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.  

மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் விவரம்: 

பெரம்பூர் - அ. சௌ ந்தரராஜன்,
சிதம்பரம்- கே. பாலகிருஷ்ணன்,
திருப்பூர் தெற்கு - கே. தங்கவேல், 
பெரியகுளம் (தனி) - ஏ. லாசர், 
திண்டுக்கல் - கே. பாலபாரதி, 
அரூர் (தனி) - பி. டில்லிபாபு, 
விளவங்கோடு - ஆர். லீமாரோஸ்.  
விக்கிரவாண்டி- ஆர். ராமமூர்த்தி, 
பாளையங்கோட்டை - வி. பழனி, 
மதுரை தெற்கு - இரா. அண்ணாதுரை,
மதுரவாயல் - க. பீம்ராவ், 
கீழ்வேளூர் (தனி) - நாகை மாலி என்கிற வி.பி. மகாலிங்கம்.  

          

Read more...

ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

          2011 தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார்.

             தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார். 

வேட்பாளர்கள் விவரம் :-

1. சேப்பாக்கம் - எஸ்.வெங்கட்ராமன்
2. திருத்தணி - ஜே.பாபு
3. விழுப்புரம் - சி.ஆரோக்கியசாமி
4. காட்பாடி - ஏ.வரதராஜன்
5. ஸ்ரீரங்கம் - கே.ஏ.எஸ்.அறிவழகன்

மதுரை

6. நாமக்கல் - கே.பழனியப்பன்
7. மதுரை மத்திய தொகுதி - ஏ.சசிகுமார்
8. மதுரை தெற்கு - என்.எஸ்.ஆர்.சாந்தாராமி
9. மேலூர் - வி.தர்மலிங்கம்
10. குன்னூர் - எம்.ஆல்வாஸ்

          ஜனதா கட்சி ஊழல், தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் பெரும் பின்னடைவை சந்திக்கும். தேர்தலுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தொடர்ந்து நீடிக்காது. காரணம் இந்த இரண்டு கூட்டணிகளும் சந்தர்ப்பவாத கூட்டணிகள். தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சூழல்நிலை உருவாகும்.

Read more...

அ.தி.மு.க.பெண் வேட்பாளர்கள்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள்.

அதன் விவரம் :-

1. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா 
2. ஆயிரம்விளக்கு- வளர்மதி 
3. அண்ணாநகர்- கோகுல இந்திரா 
4. மயிலாப்பூர்- ராஜலட்சுமி 
5. மதுராந்தகம் (தனி)- கனிதா சம்பத்
6. ஊத்தங்கரை (தனி)- மனோரஞ்சிதம்
7. போளூர்- ஜெயசுதா லட்சுமிகாந்தன் 
8. கள்ளக்குறிச்சி (தனி)- அழகுவேல் பாபு
9. சங்ககிரி- விஜயலட்சுமி பழனிச்சாமி 
10. துறையூர் (தனி)- இந்திராகாந்தி 
11. புவனகிரி- செல்விராமஜெயம்
12. சீர்காழி- சக்தி

Read more...

தி.மு.க.பெண் வேட்பாளர்கள்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில்  தி.மு.க. சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதன் விவரம் :-

1. பொன்னேரி (தனி)- மணிமோகலை 
2. மாதவரம்- டாக்டர் கனிமொழி
3. துறையூர் (தனி)- பரிமளாதேவி
4. தாராபுரம் (தனி)- ஜெயந்தி
5. பவானிசாகர் (தனி)- லோகேஸ்வரி 
6. மேலுர்- ராணி ராஜமாணிக்கம் 
7. மானாமதுரை (தனி)- தமிழரசி ரவிக்குமார் 
8. சங்கரன்கோவில்(தனி)- உமாமகேஸ்வரி 
9. ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா 
10. தூத்துக்குடி- கீதாஜீவன் 
11. பத்மநாபபுரம்- டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்

Read more...

About This Blogஇந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP