தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 21 ஏப்ரல், 2011
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: 49 ஒ வாக்களித்தவர்கள் விபரம் ( தொகுதிவாரியாக)
லேபிள்கள்:
49 O Details,
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011
வெள்ளி, 15 ஏப்ரல், 2011
2011 தமிழகதமிழக சட்டமன்றத் தேர்தலில் 76% வாக்குப் பதிவு
தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.
அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆனால், வாக்காளர்கள் 8 மணிக்கு முன்னதாகவே வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் நிற்கத் தொடங்கினர். இளைஞர்களும், முதன் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
சென்னை கோபாலபுரத்தில் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதியும், ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு தொடங்கியதும் சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது.சென்னையில் அண்ணா நகர், கே.கே.நகர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப் பதிவு தடைபட்டது.
சில இடங்களில் பிரச்னை:
இதேபோன்று, பிற மாவட்டங்களில் சில தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டன. சிறிது நேரத்தில் அவை சரிசெய்யப்பட்டன. இயந்திரங்களில் கோளாறுகள் ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார்கள் அதிகளவில் ஒலித்தன. ஆனால், இது கடந்த தேர்தலை விட மிகக் குறைவு என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.சில இடங்களில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்கள் வைத்திருந்தனர்.
வாக்களிப்பதற்கு இதுவே போதும் என நினைத்த காரணத்தால் வாக்காளர் பட்டியலில் அவர்கள் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்கவில்லை. அட்டையைக் கொண்டு வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெயர் இல்லாததால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. விக்கிரவாண்டி தி.மு.க. ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது."
விக்கிரவாண்டியில்...:
'49 ஓ': வாக்குச் சாவடி வளாகங்களிலேயே வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனால், அடையாள ஆவணம் இல்லை என்ற கவலை இன்றி மக்கள் வாக்களித்தனர். அதேசமயம், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்குள் வந்து செல்ல சாய்வு தளங்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பல வாக்குச் சாவடிகளில் செயல்படுத்தப்படவில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள் பெரும் அவதிப்பட்டே வாக்குச் சாவடிகளுக்குள் சென்றனர்.
"யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு (49 ஓ) குறித்த விளம்பரம் சுவரொட்டிகளாக வாக்குச் சாவடிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்த விழிப்புணர்வு வாக்காளர்களில் சிலருக்கு ஏற்கெனவே இருந்த காரணத்தால், வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் "49 ஓ' பிரிவைப் பயன்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் 1,000-க்கும் அதிகமானோர் அந்தப் பிரிவை பயன்படுத்தி தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
சதவீதம் அதிகம்:
இந்தத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது. சில மாவட்டங்களில் இருந்து முழுமையான நிலவரம் வராத நிலையில் வாக்குப் பதிவு சதவீதத்தின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. சரியாக 5 மணிக்கு வாக்காளர்கள் வரிசையில் நிற்பது நிறுத்தப்பட்டது. 5 மணிக்குள் வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது.
பல தொகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் மாலை 4.30 மணி முதல் 5 மணிக்கு உள்ளாக வந்தனர். இதனால், இரவு 7 மணி வரையிலும் வாக்குப் பதிவு நீடித்தது.1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுவே, தமிழக பேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப் பதிவாகும். மற்ற மாவட்டங்களின் வாக்கு சதவீதம் உறுதியாகத் தெரியும்பட்சத்தில் புதன்கிழமை பதிவான வாக்குகள் 76 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.அப்படி அதிகரித்தால், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதமே தமிழகத்தில் அதிகபட்ச வாக்கு சதவீதம் என்ற பெருமையைப் பெறும்.
மே 13-ல் வாக்கு எண்ணிக்கை:
தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே சரியாக ஒரு மாத கால இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
விஐபி தொகுதிகள் வாக்குப் பதிவு
முதல்வர் கருணாநிதி, திருவாரூர் - 75
ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் - 73
ஸ்டாலின், கொளத்தூர் - 66
விஜயகாந்த், ரிஷிவந்தியம் - 82
வாக்கு சதவீதமும் வெற்றியும்
தமிழகத்தில் 1967-ல் சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக பேரவைத் தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப் பதிவாகும். 1984 பேரவைத் தேர்தலில் 73.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்த நிலையில், 2011 பேரவைத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும்.
1967-ல் இருந்து நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்குப் பதிவு (சதவீதத்தில்) விவரம்:
1967--76.57 (தி.மு.க. வெற்றி)
1971--72.10 (தி.மு.க. வெற்றி)
1977--61.58 (அ.தி.மு.க. வெற்றி)
1980--65.42 (அ.தி.மு.க. வெற்றி)
1984--73.47 (அ.தி.மு.க. வெற்றி)
1989--69.69 (தி.மு.க. வெற்றி)
1991--63.84 (அ.தி.மு.க. வெற்றி)
1996--66.95 (தி.மு.க. வெற்றி)
2001--59.07 (அ.தி.மு.க. வெற்றி)
2006--70.56 (தி.மு.க. வெற்றி)
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
வாக்குப் பதிவு
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: பிரவீண் குமார் எச்சரிக்கை

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார். உடன் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா.
சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார். வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
யார் தகவல்கள் அளிப்பார்கள்?
ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புனித ஜார்ஜ் கோட்டையில் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது:
சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும். தேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.
எவ்வளவு பணம் பறிமுதல்?
தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார். வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் 234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்
தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில், 245 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்
.அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளில், 88 பேர் கோடீஸ்வரர்கள். தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளில், 14 பேர் கோடீஸ்வரர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, தலா, ஒரு கோடீஸ்வரர் களமிறக்கப்பட்டுள்ளார். தி.மு.க., போட்டியிடும், 119 தொகுதிகளில், 81 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் நிறுத்தியுள்ள, 63 வேட்பாளர்களில், 40 பேர் கோடீஸ்வரர்கள். பா.ம.க., நிறுத்தியுள்ள, 30 வேட்பாளர்களில், 12 பேரும், விடுதலைச் சிறுத்தைகளின், 10 வேட்பாளர்களில் இரண்டு பேரும் கோடீஸ்வரர்கள்
கொ.மு.க., ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதில், ஆறு பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் சார்பில் ஒருவர், 133 கோடி சொத்தும், அ.தி.மு.க., அணியில் ஒருவர், 103 கோடி ரூபாய் சொத்தும், அதிகபட்சமாக கணக்கு காட்டியுள்ளனர். மிகக் குறைந்த தொகையாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்லபாண்டியன் 75 ஆயிரம் ரூபாய் சொத்து கணக்கு காட்டியுள்ளார்.
லேபிள்கள்:
அதிமுக கூட்டணி,
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
தி.மு.க. கூட்டணி
திங்கள், 11 ஏப்ரல், 2011
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி முதல்வரின் தொகுதியாகவும் இருக்குமா?

தொடர்ந்து 12-வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்புடன் திருவாரூரில் மண்ணின் மைந்தராய் களமிறங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி. திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், திருவாரூர் தொகுதியில் இருந்த சில பகுதிகள் நாகை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்வேளூர் (தனி) தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மன்னார்குடி தொகுதியில் இருந்த கூத்தாநல்லூர் நகராட்சி, வக்கிராநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகள் திருவாரூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரத்தநாடு தொகுதியில் இருந்த பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பகுதிகளும் திருவாரூர் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருவாரூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக இத் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார்.
இதனால், இந்தத் தொகுதி தற்போது வி.வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகைக்கு அருகிலுள்ளது திருக்குவளை கிராமம். இங்கு பிறந்தாலும், தனது பள்ளிப் பருவக் கல்விக்காக சொந்த ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாரூருக்கு வந்து தங்கியவர் கருணாநிதி. அதன் பின்னர் அரசியலில் ஈடுபட்டு, முதன் முதலில் 1957-ம் ஆண்டில் குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, 1962-ல் தஞ்சாவூர், 1967, 1971-ல் சைதாப்பேட்டை, 1977, 1980-ல் அண்ணாநகர், 1989, 1991-ல் துறைமுகம், 1996,2001,2006-ல் சேப்பாக்கம் தொகுதி என போட்டியிட்ட 11 முறையும் தோல்வி காணாத பேரவை உறுப்பினராகத் திகழ்கிறார் கருணாநிதி. 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். 12-வது முறையாக தான் படித்து, வளர்ந்த திருவாரூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் இப்போது போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் குடவாசலை சேர்ந்த எம். ராஜேந்திரன். இவர் அதிமுகவில் மாவட்டச் செயலர், ஒன்றியக் குழுத் தலைவர், பேரூராட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமலும், கட்சிப் பணிகளில் பங்கேற்காமலும் இருந்து வந்தவர். இந்நிலையில், திடீரென ராஜேந்திரனுக்கு திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளது அதிமுக தலைமை. திருவாரூர் தொகுதியில் வெள்ளாளர்கள் அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டவர்களும் கணிசமாக உள்ளனர். இந்தத் தொகுதியில் உள்ள கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி. கள்ளர் சமுதாயத்தினரும் இங்கு உள்ளனர். திமுக வாக்கு வங்கி இத் தொகுதியில் சற்று அதிகம் என்றாலும், அதிமுக, இடதுசாரிக் கட்சிகள், தேமுதிக ஆகியவற்றுக்கு உள்ள வாக்கு வங்கியை ஒப்பிடும்போது, இரு அணிகளும் சமமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளன என்றுதான் கூற வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத் தொகுதி தனித்தொகுதியாகவே இருந்து வந்த காரணத்தால், ஜாதி வாக்குகள் வெற்றி, தோல்வியை என்றும் நிர்ணயித்ததில்லை. இதனால், வெற்றி தோல்விக்கு ஜாதி ஒரு காரணமாக இருந்ததற்கான வாய்ப்புகளும் ஏற்படவில்லை. இந்தத் தொகுதியில் 1962-ம் ஆண்டில் தொடங்கி, 2006-ம் ஆண்டு வரையிலான 11 தேர்தல்களில் திமுக அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளரே பெரும்பாலும் வெற்றி பெற்ற நிலைதான் இங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. கடந்த 2006-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உ. மதிவாணன் 76,901 வாக்குகள் பெற்று, பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ. தங்கமணி 49,968 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் என். மோகன்குமார் 5,198 வாக்குகளும் பெற்றனர். 2009 மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 75,038, அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் 55,873 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 9,734 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக தேமுதிக வாக்குகளைவிட திமுக வேட்பாளர் கிட்டதட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு பெரும்பாலும் சாதகமான தொகுதியாக திருவாரூர் தொகுதி இருந்து வந்துள்ளதை கடந்த காலத் தேர்தல் வரலாறுகள் காட்டுகின்றன. 1997-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து 10 ஊராட்சி ஒன்றியங்கள், 7 வட்டங்கள், 4 நகராட்சிகளுடன் பிரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம். இதனாலேயே, அதிமுக ஆட்சியில் கவனிக்கப்படாத பகுதியாக திருவாரூர் இருந்தது என்பது இத் தொகுதி மக்களின் பரவலான குற்றச்சாட்டு. மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி, திருவாரூரில் தமிழகத்துக்கான மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில் புதிய பேருந்து நிலையத்துக்கான நிதி ஒதுக்கீடு, அரைவட்டப் புறவழிச் சாலைக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவை மக்களுக்கான பயனுள்ள திட்டங்களில் முக்கியமானவை.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன் அதிமுகவினரிடையே சமீபகாலமாக நெருங்கிய தொடர்பில்லாதவர் என்பது அவருக்கு பலவீனம். இருப்பினும், அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு கிளைகளும், வாக்குகளும் உள்ள பகுதி திருவாரூர் தொகுதி என்பதும், மக்களை பாதித்துள்ள விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள திமுக எதிர்ப்பு அலை ஆகியவை அவருக்கு பலமாகவும் அமைந்துள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக சென்னை மாநகரில் போட்டியிட்டு வந்த முதல்வர் கருணாநிதி இந்த முறை திருவாரூருக்குப் போய் போட்டியிட நேர்ந்திருப்பது சென்னையிலும், தமிழகத்தின் ஏனைய தொகுதிகளிலும் திமுகவின் பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால், தனது சொந்த ஊரில் தனது கடைசித் தேர்தலில் கருணாநிதி போட்டியிடுகிறார் என்பது திருவாரூர் தொகுதியில் அவருக்கு பலம்.
"இப்போதாவது நமது ஊருக்கு நம்ம ஊர் பிள்ளை வந்து போட்டியிடுகிறதே' என்பது நிச்சயமாக அவருக்குக் "கை' கொடுக்கும் சென்டிமென்ட். காமராஜ், பக்தவத்சலம், அண்ணா என்று பல தலைவர்கள் தங்கள் சொந்தத் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். அந்த "சென்டிமென்டை' இந்த முறை திருவாரூரில் முதல்வர் கருணாநிதி முறியடிப்பார் என்று நம்பலாம். தொகுதி மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. என்ன தெரியுமா? "இது முதல்வர் போட்டியிடும் தொகுதியாக மட்டும்தான் இருக்குமா இல்லை முதல்வரின் தொகுதியாக இருக்குமா?' என்பதுதான்
புதன், 6 ஏப்ரல், 2011
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011; போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிவாரியாக
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011; போட்டியிடும் வேட்பாளர்கள் ( ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள்) தொகுதிவாரியாக அறிய இங்கே பார்க்கவும்
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011
திங்கள், 4 ஏப்ரல், 2011
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவின் போது முறை கேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. தொலைதொடர்பு வசதிகள் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வைத்து வாக்குப்பதிவை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து லேப்-டாப் கம்ப்யூட்டர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லேப்டாப் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு கல்லூரி மாணவர்கள் தேர்தலில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 250 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலுக்கு 2 நாள் முன்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
திருவண்ணாமலை மாவட்டம்
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
2011 தமிழக சட்டசபை தேர்தல் : 11 லட்சம் புதிய வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓட்டுப் போடச் செல்லும் வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பும் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி மொத்தம் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 3 லட்சம் பேர் ஆண்கள். 2 கோடியே 28 லட்சம் பேர் பெண்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
11 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். திருவள்ளூரில் 1 லட்சம் புதிய வாக்காளர்களும், காஞ்சீபுரத்தில் 91 ஆயிரம் புதிய வாக்காளர்களும், மதுரையில் 65 ஆயிரம் புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
வாக்குச் சாவடிகள்
வியாழன், 31 மார்ச், 2011
காஞ்சிபுரம் மாவட்டத்தில்ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமிடம் அறிவிப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள், 7 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
சோழிங்கநல்லூர்,
ஆலந்தூர்,
பல்லாவரம்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
தாம்பரம்,
செங்கல்பட்டு,
திருப்போரூர்,
செய்யூர்(தனி),
மதுராந்தகம்(தனி),
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம்
என 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் ஓட்டுகள் மே 13ம் தேதி, எண்ணப்பட உள்ளன.
சோழிங்கநல்லூர் தொகுதி ஓட்டுகள் மேடவாக்கம் சாலையில் உள்ள முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரியிலும், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் தொகுதி ஓட்டுகள் புனித தோமையார் மலைப் பகுதியில் உள்ள மான்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி ஓட்டுகள் தண்டலம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன. தாம்பரம் தொகுதி ஓட்டுகள் சென்னை கிறிஸ்தவ கல்லூரி, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதி ஓட்டுகள் வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரி, செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதி ஓட்டுகள் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் எண்ணப்பட உள்ளன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு சீலிடப்பட்ட அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்படும். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியை நேற்று, தேர்தல் பார்வையாளர்கள் அலோக்குப்தா, கிருஷன்குமார், காவல் பார்வையாளர் அலோக்ரஞ்சன், கலெக்டர் அஷிஷ்சட்டர்ஜி, எஸ்.பி., பிரேம்ஆனந்த் சின்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்
நெய்வேலி:
கற்பகம் (பா.ஜ) தாமரை,
சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை,
வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம்,
இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா,
குமார் (ஐ.ஜே.கே) மோதிரம்,
லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல்,
சுயேச்சைகள்
சந்திரா-மின் கல விளக்கு,
குமரகுரு- ரம்பம்,
பாண்டியன்-முரசு.
கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்
கடலூர்:
குணசேகரன் (பா.ஜ) தாமரை,
சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை,
புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன்,
சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல்,
சுயேச்சைகள்
சக்திதாசன் -பட்டம்,
ராஜன்-மோதிரம்.
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: களத்தில் 2,773 வேட்பாளர்கள்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.மொத்தமாக 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. மார்ச் 26-ம் தேதி மனு தாக்கல் முடிந்தது.தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 228 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் பணி கடந்த திங்கள்கிழமை நடந்தது.மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டு இருந்தார்.
மனுக்களில் அவர் கையெழுத்திடவில்லை என மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.இதையடுத்து, ஜெயந்தியின் மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த கே.வீ.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளர் ஆனார். இதேபோன்று, வேதாரண்யம் தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சதாசிவத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக, அதே கட்சியைச் சேர்ந்த சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 4 ஆயிரத்து 228 வேட்பு மனுக்களில் 1,153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்கள் வாபஸ்:
பல தொகுதிகளில் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்குப் போட்டியாக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.போட்டியாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.ஹசீனா சையத் வாபஸ்: 3,075 மனுக்களில் 313 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான புதன்கிழமையின் கடைசி நேரத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசீனா சையத் தனது மனுவை வாபஸ் பெற்றதால் மாற்று வேட்பாளரான அவரது கணவர் சையத் கியாஸ் வேட்பாளரானார்
.கை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு:
ஆனால், சையத் கியாஸýக்கு "கை' சின்னம் ஒதுக்குவதற்கு காங்கிரஸ் போட்டி வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வ வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மட்டுமே மாற்று வேட்பாளருக்கு அதே சின்னம் ஒதுக்கப்படும். ஹசீனா வாபஸ் பெற்றுள்ளதால் சையத்துக்கு "கை' சின்னம் ஒதுக்கக் கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து இப் பிரச்னை குறித்து வியாழக்கிழமை காலை முடிவு எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் விவரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:
பேரவைத் தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர். 313 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
அதிகபட்ச வேட்பாளர்:
அதிகபட்சமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
திருப்பூர் வடக்குத் தொகுதியில் மொத்தமாக 151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 60 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தொலைபேசி வழியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. படிவம் 7-"ஏ'வை சரிபார்த்தபின்புதான் துல்லியமான தகவல் வியாழக்கிழமை கிடைக்கப் பெறும் என பிரவீண் குமார் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க.வுக்கு முரசு: மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.41 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளைத் தவிர்த்து, இதர தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சைகளுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 13ந் தேதி பொதுவிடுமுறை: பிரவீண்குமார்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2011 க்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 13ந் தேதி நடைபெறுகிறது. செலாவணி முறிச்சட்டம் 1881 ன் பிரிவு 25ன் கீழ் அன்றைய தினம் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை அல்லது வணிக பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 135 பி ன்படி, ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 13 அன்று ஊதியத்துடன்கூடிய விடுப்பு அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய், 29 மார்ச், 2011
அ..தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.
கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
| அ.தி.மு.க. கூட்டணி | போட்டி |
| அ.தி.மு.க. | 160 |
| தே.மு.தி.க. | 41 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 12 |
| இந்திய கம்யூனிஸ்ட் | 10 |
| மனிதநேய மக்கள் கட்சி | 3 |
| புதிய தமிழகம் கட்சி | 2 |
| அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | 2 |
| அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் | 1 |
| இந்திய குடியரசு கட்சி | 1 |
| அகில இந்திய பார்வர்டு பிளாக் | 1 |
| கொங்கு இளைஞர் பேரவை | 1 |
லேபிள்கள்:
அதிமுக கூட்டணி,
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
தொகுதி பங்கீடு
ஞாயிறு, 27 மார்ச், 2011
சுயேச்சைகளுக்கு 53 சின்னங்கள் தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு
தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்காக 53 சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்கள் அல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 53 சின்னங்கள் வருமாறு:
அலமாரி,
பலூன்,
கூடை,
கிரிக்கெட் மட்டை,
மட்டைபந்தடி வீரர்,
மின்கல விளக்கு,
கரும்பலகை, ரொட்டி,
கைப்பெட்டி,
ப்ரஷ்,
கேக்,
புகைப்படக் கருவி,
மெழுகுவர்த்தி,
கேரட்,
கூரை மின்விசிறி,
கோட்டு,
தேங்காய்,
கட்டில்,
கப் அண்ட் சாசர்,
டீசல் பம்ப்,
சிவிகை,
மின் கம்பம்,
சிறுமியர் சட்டை,
வாணலி,
காஸ் சிலிண்டர்,
காஸ் அடுப்பு,
கண்ணாடி தம்ளர்,
ஆர்மோனியம்,
தொப்பி,
ஐஸ்கிரீம்,
இஸ்திரி பெட்டி,
கூஜா,
கொதக்கென்டி,
பட்டம்,
சீமாட்டி பணப்பை,
கடிதப் பெட்டி,
முரசு,
ப்ரஷர் குக்கர்,
மோதிரம்,
சாலை உருளை,
ரம்பம்,
கத்தரிக்கோல்,
தையல் இயந்திரம்,
இறகு பந்து,
சிலேட்,
ஸ்டூல்,
மேசை,
மேசை விளக்கு,
தொலைக்காட்சிப் பெட்டி,
கூடாரம்,
வயலின்,
ஊன்றுகோல்,
ஊதல் ஆகியவையாகும்.
இவற்றில் சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
லேபிள்கள்:
கட்சி சின்னங்கள்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011
புதன், 23 மார்ச், 2011
ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2011 தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விவரம் :-
1. சேப்பாக்கம் - எஸ்.வெங்கட்ராமன்
1. சேப்பாக்கம் - எஸ்.வெங்கட்ராமன்
2. திருத்தணி - ஜே.பாபு
3. விழுப்புரம் - சி.ஆரோக்கியசாமி
4. காட்பாடி - ஏ.வரதராஜன்
5. ஸ்ரீரங்கம் - கே.ஏ.எஸ்.அறிவழகன்
மதுரை
6. நாமக்கல் - கே.பழனியப்பன்
7. மதுரை மத்திய தொகுதி - ஏ.சசிகுமார்
8. மதுரை தெற்கு - என்.எஸ்.ஆர்.சாந்தாராமி
9. மேலூர் - வி.தர்மலிங்கம்
10. குன்னூர் - எம்.ஆல்வாஸ்
ஜனதா கட்சி ஊழல், தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் பெரும் பின்னடைவை சந்திக்கும். தேர்தலுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தொடர்ந்து நீடிக்காது. காரணம் இந்த இரண்டு கூட்டணிகளும் சந்தர்ப்பவாத கூட்டணிகள். தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சூழல்நிலை உருவாகும்.
அ.தி.மு.க.பெண் வேட்பாளர்கள்
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 பேர் பெண்கள்.
அதன் விவரம் :-
1. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா
1. ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா
2. ஆயிரம்விளக்கு- வளர்மதி
3. அண்ணாநகர்- கோகுல இந்திரா
4. மயிலாப்பூர்- ராஜலட்சுமி
5. மதுராந்தகம் (தனி)- கனிதா சம்பத்
6. ஊத்தங்கரை (தனி)- மனோரஞ்சிதம்
7. போளூர்- ஜெயசுதா லட்சுமிகாந்தன்
8. கள்ளக்குறிச்சி (தனி)- அழகுவேல் பாபு
9. சங்ககிரி- விஜயலட்சுமி பழனிச்சாமி
10. துறையூர் (தனி)- இந்திராகாந்தி
11. புவனகிரி- செல்விராமஜெயம்
12. சீர்காழி- சக்தி
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
பெண் வேட்பாளர்கள்
தி.மு.க.பெண் வேட்பாளர்கள்
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் :-
1. பொன்னேரி (தனி)- மணிமோகலை
2. மாதவரம்- டாக்டர் கனிமொழி
3. துறையூர் (தனி)- பரிமளாதேவி
4. தாராபுரம் (தனி)- ஜெயந்தி
5. பவானிசாகர் (தனி)- லோகேஸ்வரி
6. மேலுர்- ராணி ராஜமாணிக்கம்
7. மானாமதுரை (தனி)- தமிழரசி ரவிக்குமார்
8. சங்கரன்கோவில்(தனி)- உமாமகேஸ்வரி
9. ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா
10. தூத்துக்குடி- கீதாஜீவன்
11. பத்மநாபபுரம்- டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்
லேபிள்கள்:
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011,
தி.மு.க,
பெண் வேட்பாளர்கள்
செவ்வாய், 22 மார்ச், 2011
தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல்
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியோடு சேர்ந்து தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை தேமுதிக வெளியிட்டது. பின்னர் வேட்பாளர்கள் பட்டியலையும் தேமுதிக அறிவித்துள்ளது.
1. விருத்தாசலம் (152) பிவிபி முத்துக்குமார்
2. திருக்கோயிலூர் (76) எல்.வெங்கடேசன்
3. ரிஷிவந்தியம் (78) விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
4. திருச்செங்கோடு (96) சம்பத்குமார்,
5. ஆரணி (67) ஆர்.மோகன்
2. திருக்கோயிலூர் (76) எல்.வெங்கடேசன்
3. ரிஷிவந்தியம் (78) விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
4. திருச்செங்கோடு (96) சம்பத்குமார்,
5. ஆரணி (67) ஆர்.மோகன்
6. செங்கம் (தனி) (62) டி.சுரேஷ்குமார்
7. பட்டுக்கோட்டை (176) என்.செந்தில்குமார்
8. கும்மிடிபூண்டி (1) சி.எச் சேகர்,
9. திருத்தணி (3)
10. சோளிங்கர் (39) பி.ஆர்.மனோகர்
7. பட்டுக்கோட்டை (176) என்.செந்தில்குமார்
8. கும்மிடிபூண்டி (1) சி.எச் சேகர்,
9. திருத்தணி (3)
10. சோளிங்கர் (39) பி.ஆர்.மனோகர்
11. தருமபுரி (59) பாஸ்கர்
12. கெங்கவல்லி (தனி) (81) ஆர்.சுபா
13. மதுரை மையம் (193) ஆர்.சுந்தர்ராஜன்
14. கூடலூர் (தனி) (109) எஸ்.செல்வராஜ்
15. திருவாடானை (210) முஜிபுர் ரஹ்மான்
12. கெங்கவல்லி (தனி) (81) ஆர்.சுபா
13. மதுரை மையம் (193) ஆர்.சுந்தர்ராஜன்
14. கூடலூர் (தனி) (109) எஸ்.செல்வராஜ்
15. திருவாடானை (210) முஜிபுர் ரஹ்மான்
16. திட்டக்குடி (தனி) (151) தமிழ் அழகன்,
17. குன்னம் (148) துரை.காமராஜ்
18. மயிலாடுதுறை (161) ஏ.ஆர்.பாலஅருட்செல்வம்
19. திருவெறும்பூர் (142) எஸ்.செந்தில்குமார்
20. சேலம் (வடக்கு) (89) மோகன்ராஜ்
17. குன்னம் (148) துரை.காமராஜ்
18. மயிலாடுதுறை (161) ஏ.ஆர்.பாலஅருட்செல்வம்
19. திருவெறும்பூர் (142) எஸ்.செந்தில்குமார்
20. சேலம் (வடக்கு) (89) மோகன்ராஜ்
21. ராதாபுரம் (228) மைக்கேல் எஸ்.ராயப்பன்
22. சூலூர் (116) கே.தினகரன்
23. விருகம்பாக்கம் (22) ப.பார்த்தசாரதி
24. ஒசூர் (55) டாக்டர் எஸ்.ஜான்சன்
25. லால்குடி (143) அ.தி.செந்தூரேஸ்வரன்
22. சூலூர் (116) கே.தினகரன்
23. விருகம்பாக்கம் (22) ப.பார்த்தசாரதி
24. ஒசூர் (55) டாக்டர் எஸ்.ஜான்சன்
25. லால்குடி (143) அ.தி.செந்தூரேஸ்வரன்
26. பேராவூரணி (177) சி.அருண்பாண்டியன் &
27. செங்கல்பட்டு (32) டி.முருகேசன்
28. எழும்பூர் (தனி) (16) நல்லதம்பி
29. செஞ்சி (70) சிவா (எ) சிவலிங்கம்
30. ஈரோடு (கிழக்கு) (98) வி.சி.சந்திரகுமார்
27. செங்கல்பட்டு (32) டி.முருகேசன்
28. எழும்பூர் (தனி) (16) நல்லதம்பி
29. செஞ்சி (70) சிவா (எ) சிவலிங்கம்
30. ஈரோடு (கிழக்கு) (98) வி.சி.சந்திரகுமார்
31. கம்பம் (201) பி.முருகேசன்
32. சேந்தமங்கலம் (93) சாந்தி ராஜமாணிக்கம்
33. திருப்பரங்குன்றம் (195) ஏ.கே.டி.ராஜா
34. விருதுநகர் (206) க.பாண்டியராஜன்
35. ஆத்தூர் (129) எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியன்
32. சேந்தமங்கலம் (93) சாந்தி ராஜமாணிக்கம்
33. திருப்பரங்குன்றம் (195) ஏ.கே.டி.ராஜா
34. விருதுநகர் (206) க.பாண்டியராஜன்
35. ஆத்தூர் (129) எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியன்
36. பண்ருட்டி (154) பி.சிவக்கொழுந்து
37. அணைக்கட்டு (44) வி.பி.வேலு
38. பத்மநாபபுரம் (232) எஸ். ஆஸ்டின்,
39. வேப்பனஹள்ளி (54) எஸ்.எம்.முருகேசன்
40. மேட்டூர் (85) எஸ்.ஆர்.பார்த்திபன்
41. ஆலந்தூர் (28) பண்ருட்டி ராமச்சந்திரன்
37. அணைக்கட்டு (44) வி.பி.வேலு
38. பத்மநாபபுரம் (232) எஸ். ஆஸ்டின்,
39. வேப்பனஹள்ளி (54) எஸ்.எம்.முருகேசன்
40. மேட்டூர் (85) எஸ்.ஆர்.பார்த்திபன்
41. ஆலந்தூர் (28) பண்ருட்டி ராமச்சந்திரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
