ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 மார்ச், 2011

ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

          2011 தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார்.

             தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் வெளியிட்டார். 

வேட்பாளர்கள் விவரம் :-

1. சேப்பாக்கம் - எஸ்.வெங்கட்ராமன்
2. திருத்தணி - ஜே.பாபு
3. விழுப்புரம் - சி.ஆரோக்கியசாமி
4. காட்பாடி - ஏ.வரதராஜன்
5. ஸ்ரீரங்கம் - கே.ஏ.எஸ்.அறிவழகன்

மதுரை

6. நாமக்கல் - கே.பழனியப்பன்
7. மதுரை மத்திய தொகுதி - ஏ.சசிகுமார்
8. மதுரை தெற்கு - என்.எஸ்.ஆர்.சாந்தாராமி
9. மேலூர் - வி.தர்மலிங்கம்
10. குன்னூர் - எம்.ஆல்வாஸ்

          ஜனதா கட்சி ஊழல், தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் பெரும் பின்னடைவை சந்திக்கும். தேர்தலுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தொடர்ந்து நீடிக்காது. காரணம் இந்த இரண்டு கூட்டணிகளும் சந்தர்ப்பவாத கூட்டணிகள். தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சூழல்நிலை உருவாகும்.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP