தி.மு.க. கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க. கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் 234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்

           தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில், 245 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்

            .அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளில், 88 பேர் கோடீஸ்வரர்கள். தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளில், 14 பேர் கோடீஸ்வரர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, தலா, ஒரு கோடீஸ்வரர் களமிறக்கப்பட்டுள்ளார். தி.மு.க., போட்டியிடும், 119 தொகுதிகளில், 81 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் நிறுத்தியுள்ள, 63 வேட்பாளர்களில், 40 பேர் கோடீஸ்வரர்கள். பா.ம.க., நிறுத்தியுள்ள, 30 வேட்பாளர்களில், 12 பேரும், விடுதலைச் சிறுத்தைகளின், 10 வேட்பாளர்களில் இரண்டு பேரும் கோடீஸ்வரர்கள்

             கொ.மு.க., ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதில், ஆறு பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் சார்பில் ஒருவர், 133 கோடி சொத்தும், அ.தி.மு.க., அணியில் ஒருவர், 103 கோடி ரூபாய் சொத்தும், அதிகபட்சமாக கணக்கு காட்டியுள்ளனர். மிகக் குறைந்த தொகையாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்லபாண்டியன் 75 ஆயிரம் ரூபாய் ‌சொத்து கணக்கு காட்டியுள்ளார்.

Read more...

செவ்வாய், 29 மார்ச், 2011

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
 


தி.மு.க. கூட்டணி போட்டி 
 தி.மு.க. 119
 காங்கிரஸ் 63
 பா.ம.க. 30
 விடுதலை சிறுத்தைகள் கட்சி 10
 கொங்கு நாடு முன்னேற்ற கழகம் 7
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3
 மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1
 பெருந்தலைவர் மக்கள் கட்சி 1

Read more...

வியாழன், 17 மார்ச், 2011

பாமக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.   30 தொகுதிகளில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக அறிவித்துள்ளது.

அதன் விபரம்:  
1. மேட்டூர் - கோ.க.மணி, 

2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு, 


 3. நெய்வேலி- தி.வேல்முருகன்

Read more...

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

தி.மு.க., கூட்டணியில்  மூமுக போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்  இருவரும் கையெழுத்து இட்டனர் . மூமுகவுக்கு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read more...

பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

தி.மு.க., கூட்டணியில்  பெ.ம.க. போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும்,  பெமக அமைப்பாளர் என்.ஆர். தனபாலன் இருவரும் கையெழுத்து இட்டனர் .பெமகவுக்கு பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Read more...

கொமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

            தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., ‌தலைவர் கருணாநிதியும், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.

விபரம்
  
  1. சூலூர், 
  2. பொள்ளாச்சி,
  3. பல்லடம், 
  4. உடுமலை, 
  5. பெருந்துறை,
  6. கோபி, 
  7. நாமக்கல் 

ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.


Read more...

புதன், 16 மார்ச், 2011

பாமக போட்டியிடும் தொகுதிகள்

            திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்  நேற்று  முடிவு செய்யப்பட்டன.    திமுக - பாமக உடன்பாடு ஏற்பட்டது.    இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாஸும் உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க கட்சி போட்டியிடும் 30 தொகுதிகள் பட்டியல்  வெளியிடப்பட்டது. 

அதன் விவரம்;

1.வேளச்சேரி, 
2,ஆலங்குடி, 
3.கும்மிடிப்பூண்டி,
4.பாலகோடு,
5.திருப்போரூர்,
6.ஜோலார் பேட்டை, 
7.எடப்பாடி, 
8.மதுரவாயில், 
9.அணைக்கட்டு, 
10.பவுனகிரி, 
11.திண்டிவனம், 
12.வேதாரண்யம், 
13.செங்கல்பட்டு, 
14. காஞ்சிபுரம், 
15.ஓமலூர், 
16.பூமபு்கார், 
17.பவானி, 
18. ஜெயங்கொண்டம் 
19.கோவில்பட்டி, 
20. பரமத்திவேலூர், 
21.நெய்வேலி, 
22.தர்மபுரி, 
23.ஆற்காடு, 
24.போளூர், 
25. செஞ்சி, 
26.மயிலம், 
27. திண்டுக்கல், 
28.பர்கூர், 
29. சோழவந்தான் (தனி) 
30. மேட்டூர்.

Read more...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

    சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் உடன்பாடு ஆனது.  திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வி.சி. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்.

அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


அதன் விபரம்;

1.சீர்காழி (தனி), 

2. அரக்கோணம் (தனி), 
3.கள்ளக்குறிச்சி (தனி), 
4.உளுந்தூர்பேட்டை, 
5. திட்டக்குடி (தனி), 
6. ஊத்தங்கரை (தனி), 
7. அரூர் (தனி), 
8. சோழிங்கநல்லூர், 
9. காட்டுமன்னார்கோயில் (தனி), 
10. செய்யூர் (தனி).

Read more...

செவ்வாய், 15 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

              திமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் திமுக கூட்டணிக்கு அதரவாக பெருந்தலைவர் மக்கள் கட்சி பிரச்சாரம் செய்யும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Read more...

ஞாயிறு, 13 மார்ச், 2011

சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட 122 பேர் விருப்ப மனு


                    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப் பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ.52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

        திருமாவளவன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகின்றது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

                        

Read more...

வெள்ளி, 11 மார்ச், 2011

2011 சட்டமன்ற தேர்தலில் 99 தொகுதிகளில் மீண்டும் திமுக போட்டி?

              சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகளும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

           எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.ஏற்கனவே வென்ற தொகுதிகளை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது. இதுபோல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிகளிலும் மீண்டும் வேட்பாளர்களை நிறுத்த தி.மு.க. விரும்புகிறது.

அந்த தொகுதிகள் விவரம் :-

1. சங்கராபுரம் 
2. வாணியம்பாடி 
3. ராதாபுரம்
4. ஆலந்தூர்
5. துறைமுகம் 
6. குத்தாலம் 
7. பழனி
8. திருச்சி-1 
9. சேலம்-2 1
0. உப்பிலியாபுரம் 
11. ராசிபுரம்
12. சாத்தூர் 
13. தாம்பரம்
14. வீரபாண்டி 
15. பனைமரத்துப்பட்டி 
16. நெல்லிக்குப்பம்
17. பெரம்பலூர்
18. சின்னசேலம்
19. அறந்தாங்கி
20. தஞ்சாவூர்
21. கடலூர்
22. செஞ்சி
23. சேப்பாக்கம் 
24. தென்காசி
25. அரவக்குறிச்சி
26. ராணிப்பேட்டை
27. கிருஷ்ணராயபுரம் 
28. தூத்துக்குடி
29. அந்தியூர் 30. ஒட்டன்சத்திரம் 
31. அச்சிறுப்பாக்கம்
32. திருவொற்றியூர் 
33. வெள்ளக்கோவில் 
34. ஆண்டிமடம் 
35. ஆரணி 
36. திருவள்ளூர் 
37. பேரணாம்பட்டு
38. தலைவாசல்
39. உத்திரமேரூர்
40. பவானிசாகர்
41. கன்னியாகுமரி 
42. நாட்ராம்பள்ளி
43. கிருஷ்ணகிரி 
44. முசிறி 
45. திருவெறும்பூர் 
46. மதுரை மத்தி 
47. லால்குடி 
48. குன்னூர்
49. அருப்புக்கோட்டை
50. கடலாடி
51. சமயநல்லூர் 
52. ஏற்காடு 
53. சத்தியமங்கலம் 
54. பத்மநாபபுரம் 
55. உளுந்தூர்பேட்டை 
56. திருவையாறு 
57. சங்ககிரி 
58. காட்பாடி 
59. திருச்சி-2 
60. எழும்பூர்
61. கோவை கிழக்கு 
62. சீர்காழி 
63. குறிஞ்சிப்பாடி
64. புரசைவாக்கம்
65. திருவண்ணாமலை 
66. தாராபுரம் 
67. கண்டமங்கலம் 
68. ஆலங்குளம் 
69. திருப்பத்தூர் 
70. ஆத்தூர் 
71. விழுப்புரம் 
72. சேந்தமங்கலம்
73. திருவோணம்
74. கும்பகோணம்
75. பொங்கலூர்
76. திருவாரூர்
77. குளித்தலை
78. திருநெல்வேலி 
79. முதுகுளத்தூர்
80. மொரப்பூர்
81. சோழவந்தான்
82. பாளையங்கோட்டை 
83. வில்லிவாக்கம் 
84. கடலூர்
85. நாகர்கோவில்
86. ஈரோடு 
87. போடிநாயக்கனூர்
88. அண்ணாநகர்
89. வேதாரண்யம் 
90. தண்டராம்பட்டு 
91. அரக்கோணம் 
92. ஆயிரம் விளக்கு
 93. திருமங்கலம்
94. பர்கூர் 
95. இளையான்குடி 
96. கம்பம்
97. திருசெந்தூர் 
98. வந்தவாசி
99.அம்பாசமுத்திரம்

Read more...

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அரவாணிகள் பிரச்சாரம்

            தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.   தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.வி.கிருபா மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

             திருநங்கைகளுக்கென தனி நலவாரியம் அமைத்து திருநங்கைகள் தினத்தை அங்கீகாரம் அளித்து அரசாணை பிறப்பித்த தி.மு.க.அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.

பின்னர் தமிழ்நாடு அரவாணிகள் சங்க தலைவி பிரியாபாபு, செயலாளர் கிருபா ஆகியோர் கூறியது

                 "துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாங்கள் சந்தித்து வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக கூறி இருக்கிறோம். தமிழ்நாட்டில் 3 லட்சம் அரவாணிகள் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு மரியாதை கிடைத்தது.   அரவாணிகள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு கொடுத்து இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

                கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எங்களை சேர்த்திருக்கிறார்கள். இலவச அறுவை சிகிச்சைக்கும் அரசு உதவுகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் இருந்து எங்கள் பிரசாரத்தை தொடங்குவோம்’’ என்று தெரிவித்தார்.

Read more...

வியாழன், 10 மார்ச், 2011

திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்


       திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக்கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,  மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளிடையே தொகுதிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம் 
 
திமுக 121

காங்கிரஸ் 63, 
பாமக 30, 
விடுதலை சிறுத்தைகள் 10, 
கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் 7, 
 இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, 
மூவேந்தர் முன்னேற்றக்கழகம்  1 

என 234 தொகுதிகளும்  பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.



Read more...

திங்கள், 7 மார்ச், 2011

தி.மு.க.கூட்டணியில் கொங்கு நாடுமுன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள்

 கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் 

பொள்ளாச்சி, 
உடுமலைப்பேட்டை,
சூலூர் பல்லடம், 
திருப்பூர் வடக்கு, 
காங்கேயம், 
தொண்டமுத்தூர், 
மடத்துகுளம், 
அரவக்குறிச்சி, 
அந்நியூர், 
ஈரோடு மேற்கு, 
கோபி 

             உள்ளிட்ட 15 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளன. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கிடைத்தால் நந்தகுமார், பெருந்துறை அல்லது காங்கயம் கிடைத்தால் கே.கே.சி.பாலு, சூலூரில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பொள்ளாட்சி ஒதுக்கப்பட்டால் நித்யானந்தம் அல்லது இளம்பரிதி, தொண்டமுத்தூர் கிடைத்தால் லோகநாதன், அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கினால் சக்தி கோச் நடராஜ் அல்லது நிர்மலாபெரியசாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம் : ஜி.கே.மணி

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

               "தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தைலாபுரம்  தோட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் 3.3.2011 முதல் 7.3.2011 வரை விண்ணப்பிக்கலாம்.  இதற்கென உரிய படிவத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும்  10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  

Read more...

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எது? திருமாவளவன் ஆலோசனை


            விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில்  10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் தலைவர் திருமாவளவன்  ஆலோசனை நடத்தினார்.

                வேளச்சேரியில் உள்ள தமிழ்மண் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம், சாதக பாதக வாய்ப்புகள், தனித் தொகுதி, பொதுத் தொகுதியாக எதை தேர்வு செய்யலாம் என அடையாளம் காண்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

          இதையடுத்து  வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்திலும் தொகுதிகள் தேர்வு செய்வது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.

இது குறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது 

              ’’தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சியின் அங்கீகாரம் பெற 15 தொகுதிகள் தேவை என்பதால் நாங்கள் அவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை கணக்கில் கொண்டு கூட்டணியில் பிற கட்சிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.

               அதனால் இத்தனை சீட்டுகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனால் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தொண்டர்கள் என்ன வேண்டாம். நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் நாம் என்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறலாம்.

             4-ந் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதிலும் இன்று நடக்கின்ற தலைமை நிர்வாகிகள் கூட்டத்திலும் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 பொது தொகுதியில் விடுதலை சிறுத்தை போட்டியிடும். சென்னையிலும் தொகுதி கேட்க முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Read more...

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள்

          திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.

       இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

சனி, 19 பிப்ரவரி, 2011

புதிய சிக்கலில் அ.தி.மு.க

ஒரு வழியாக தி.மு.க கூட்டணியில் பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதுவே அ.தி.மு.க.விற்கு புதிய சிக்கலினை   உருவாக்கியுள்ளது.  அ.தி.மு.க கூட்டணியில்  தேமுதிக இடம்பெற  50 தொகுதிகளாவது நிச்சயம் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி உடன்பாடு ஏற்படும்.  பொறுத்திருந்து  பார்ப்போம் தமிழத்தின் விடிவுகாலம் யார் கையில் என்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Read more...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.விற்கு 31தொகுதிகள்

சென்னை: 

            தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 சட்டசபை தொகுதிகளும், 2013ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை 9 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு முடிவானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், ராமதாசும் கையெழுத்திட்டனர்.

Read more...

சனி, 4 டிசம்பர், 2010

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

  சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்;
 
 திருமாவளவன் பேட்டி
 
சிதம்பரம்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது
பேட்டி:

தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

               நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய மந்திரிகள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

                 பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

                    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

             விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

             பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், துணைச் செயலாளர் செல்லப்பன், பசுமைவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP