விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மார்ச், 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம்: தொல்.திருமாவளவன்

           2011 சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

          திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் முகமது யூசப் அறிமுகப்படுத்தும் கூட்டம், அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய தொல்.திருமாவளவன், 

              திமுக கூட்டணியில் பாமகவுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கியுள்ளது என்றார்.

Read more...

ஞாயிறு, 13 மார்ச், 2011

சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட 122 பேர் விருப்ப மனு


                    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப் பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ.52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

        திருமாவளவன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகின்றது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

                        

Read more...

புதன், 9 மார்ச், 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்4 தொகுதிக்கு விருப்ப மனு: கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன்

கடலூர்:

           கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 4  தொகுதிக்கு விருப்ப மனு செய்து, ஏதாவது ஒன்றில் வாய்ப்பளிக்க  கட்சி தலைமையிடம் கேட்டுள்ளார்.  சென்னையில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து விருப்ப மனுக்களை, தாமரைச் செல்வன் அளித்து உள்ளார். அதில் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் வாய்ப்பு அளிக்குமாறு அவர் மனு கொடுத்து இருப்பதாகத் தெரிவித்தார்.

Read more...

வியாழன், 3 மார்ச், 2011

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எது? திருமாவளவன் ஆலோசனை


            விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில்  10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் தலைவர் திருமாவளவன்  ஆலோசனை நடத்தினார்.

                வேளச்சேரியில் உள்ள தமிழ்மண் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம், சாதக பாதக வாய்ப்புகள், தனித் தொகுதி, பொதுத் தொகுதியாக எதை தேர்வு செய்யலாம் என அடையாளம் காண்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

          இதையடுத்து  வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்திலும் தொகுதிகள் தேர்வு செய்வது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.

இது குறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது 

              ’’தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சியின் அங்கீகாரம் பெற 15 தொகுதிகள் தேவை என்பதால் நாங்கள் அவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை கணக்கில் கொண்டு கூட்டணியில் பிற கட்சிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.

               அதனால் இத்தனை சீட்டுகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனால் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தொண்டர்கள் என்ன வேண்டாம். நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் நாம் என்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறலாம்.

             4-ந் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதிலும் இன்று நடக்கின்ற தலைமை நிர்வாகிகள் கூட்டத்திலும் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 பொது தொகுதியில் விடுதலை சிறுத்தை போட்டியிடும். சென்னையிலும் தொகுதி கேட்க முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Read more...

புதன், 2 மார்ச், 2011

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள்


 
           தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்டது. 

             இதன் மூலம் வரும் தேர்தலில் தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். 

          இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி ஆகிய தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர்.  சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 பேரவை தொகுதிகளை ஒதுக்குவது என ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தில் கருணாநிதியும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.   

             தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்குவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தோம். பின்னர் பேச்சுவார்த்தையின்போது 15 தொகுதிகளை அவசியம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.  இப்போது 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள்.

             கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.வுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. எனவே, இந்தத் தொகுதிகளை திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.  தி.மு.க. அணியின் வெற்றிக்கு எங்கள் கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கென ஒரு தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார் திருமாவளவன்.  

கடந்த தேர்தலில்: 

            கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டு, மங்களூர், காட்டுமன்னார்கோயில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

Read more...

சனி, 4 டிசம்பர், 2010

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

  சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்;
 
 திருமாவளவன் பேட்டி
 
சிதம்பரம்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது
பேட்டி:

தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

               நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய மந்திரிகள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

                 பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

                    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

             விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

             பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், துணைச் செயலாளர் செல்லப்பன், பசுமைவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

சனி, 28 ஆகஸ்ட், 2010

விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்



               திருச்சி கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு மாநாடு, திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடைபெற்றது.

                  இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அக்டோபர் 10ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களை திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும்.

                   தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கிகளை பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதை ஏற்றுக்கொள்ள ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மறுக்கின்றனர்.

                     1999ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியில் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் கட்சி திமுக, அதிமுகவுக்கு பிறகு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப் பிடித்து வருகின்றன.

                          சமீபத்தில் சோலை என்கிற எழுத்தாளர் கட்டுரை எழுதியிருந்தார்.  அ
வர் முதிர்ந்த அரசியல்  அதேபோல தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள். இப்படி மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளை ஏற்று கொள்ளாத நிலையிலும், தவிர்க்க முடியாமல் சிலர் பதிவு செய்கிறார்கள் என்றார்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP