விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்4 தொகுதிக்கு விருப்ப மனு: கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன்
கடலூர்:
கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 தொகுதிக்கு விருப்ப மனு செய்து, ஏதாவது ஒன்றில் வாய்ப்பளிக்க கட்சி தலைமையிடம் கேட்டுள்ளார். சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து விருப்ப மனுக்களை, தாமரைச் செல்வன் அளித்து உள்ளார். அதில் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் வாய்ப்பு அளிக்குமாறு அவர் மனு கொடுத்து இருப்பதாகத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக