சனி, 12 மார்ச், 2011

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பார்வை


துறைமுகம்
தொகுதி பெயர்
 
துறைமுகம் 
 
வரிசை எண்
 
18 
 
அறிமுகம் :
 
              1952 - ம் ஆண்டு துறைமுகம் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பூங்காநகர் தொகுதி நீக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் இருந்த வார்டுகள் 43, 44, 48 மட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பில் சிறிய தொகுதியாக இது உருவாகி இருக்கிறது. முன்பு சேப்பாக்கம் தொகுதியே சிறிய தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் இதுவரை 14 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. 1977-ல் இருந்து திமுகவின் கோட்டையாக இத்தொகுதி திகழ்ந்து வருகிறது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தமிழகம் முழுவதும் திமுக தோற்றபோதிலும் இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி வெற்றிபெற்றார். ஆனால், கருணாநிதி தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்காமல் உடனே தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. 1989, 1991 தேர்தல்களில் முதல்வர் கருணாநிதியும், 1996, 2001, 2006 தேர்தல்களில் பேராசிரியர் க.அன்பழகனும் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்கள். கடந்த முறை 2006-ல் நடைபெற்ற தேர்தலில் க.அன்பழகன் 410 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார் 
 
இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள். 
 
1951 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1957 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1962 ஹாஜா செரீப் (காங்கிரஸ்)
1967 டாக்டர் ஹபிபுல்லா பேக் (சுயேச்சை)
1971 மொய்தீன் (சுயேச்சை)
1977 செல்வராஜன் (திமுக)
1980 செல்வராஜன் (திமுக)
1984 செல்வராஜன் (திமுக)
1989 மு.கருணாநிதி (திமுக)
1991 மு.கருணாநிதி (திமுக)
1991 செல்வராஜ் (திமுக)
இடைத் தேர்தல்1996 க.அன்பழகன் (திமுக)
2001 க.அன்பழகன் (திமுக)
2006 க.அன்பழகன் (திமுக) 
 
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள். 
 
வார்டு 23, 
வார்டு 24, 
வார்டு 25, 
வார்டு 26,
வார்டு 27, 
வார்டு 28, 
வார்டு 29, 
வார்டு 30, 
வார்டு 43, 
வார்டு 44, 
வார்டு 48, 
வார்டு 49, 
வார்டு 80. 
 
வாக்காளர்கள் 
 
ஆண் 75,621
பெண் 69,531
திருநங்கைகள் 31
மொத்தம்   1,45,183 
 
வாக்குச்சாவடிகள் 
 
மொத்தம் : 157 
 
தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
 
 மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் எ.சுந்தரவல்லி - 94431 58866

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP