ஸ்ரீரங்கம்: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக இளம் வேட்பாளர்

திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுபவர் திமுகவைச் சேர்ந்த- 30 வயதே நிரம்பிய இளம் வேட்பாளர் என். ஆனந்த்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, திமுக வேட்பாளர் யார் என்ற ஆவல் தொகுதிக்குள் எழுந்தது. இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கத்தில் என். ஆனந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர் வரலாறு :
திமுக வேட்பாளர் ஆனந்த் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அல்லித்துறை ஊராட்சியைச் சேர்ந்த சாந்தாபுரத்தில் வசித்து வருபவர். இவரது
பிறந்த தேதி:
28.8.1981.
பெற்றோர்:
இவரது தந்தை நாகராஜன், தாய் பாப்பாத்தி. தி.மு.க. குடும்பம்.
தொழில்
பிரதான தொழில் விவசாயம்.
கட்சி பதவி :
2002-ம் ஆண்டு முதல் சாந்தாபுரம் திமுக கிளையின் செயலராக இருந்து வருகிறார் ஆனந்த்.
படிப்பு :
பி.எஸ்ஸி., பட்டதாரி.
மனைவி:
சௌம்யா .
குழந்தை :
ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
அனுபவம் :
முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ஆனந்த், அதிமுக்கிய (விவிஐபி) வேட்பாளருடன் மோதுகிறார்.
1 கருத்துகள்:
:-)
கருத்துரையிடுக