ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

அவர் அத்தொகுதி மக்களுக்க் அளித்துள்ள வாக்குறுதிகள்:


1. உங்களது தொகுதியில் உங்களின் அன்பு சகோதரியாக நான் வேட்பாளராக இருக்கிறேன். எனது பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். நான் உங்களது உள்ளூர் பிரச்னையும் நன்கு அறிவேன்.

2. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும், விற்க முடியாத சூழலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். 


3.மழை காலங்களில் அடிக்கடி ஸ்ரீரங்கம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். சரிவர செயல்படுத்தாத மணிகண்டம் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

4. புங்கனூர், கள்ளிக்குடி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் துயரம் துடைக்கப்படும்.கோரையாறு, அரியாறு குறுக்கே பாலம் கட்டப்படும். புங்கனூர்-அல்லித்துறை இடையே அரியாறு பாலம் கட்டப்படும்.

5. உய்யக் கொண்டான் திருமலை- இனியானூர் சாலையில் பாலம் அமைக்கப்படும் இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களிடையே ஜெயலலிதா பேசியபோது, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும். என்று வாக்குறுதி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

Read more...

செவ்வாய், 22 மார்ச், 2011

திமுக தலைவர்களை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்

                முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், நிதி அமைச்சர் க.அன்பழகன் ஆகிய திமுக தலைவர்களை எதிர்த்து அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
 
               திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை எதிர்த்து, திருவாரூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் குடவாசல் எம்.ராசேந்திரன் போட்டியிடுகிறார்.

                 கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து, தென்சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் சைதை சா.துரைசாமி போட்டியிடுகிறார்.

               வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளரும், நிதி அமைச்சருமான க.அன்பழகனை எதிர்த்து, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பிரபாகர் போட்டியிடுகிறார்.

                 இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து, சாந்தாபுரம் திமுக கிளைக் கழக முன்னாள் செயலாளர் என்.ஆனந்த் போட்டியிடுகிறார்.

Read more...

வெள்ளி, 18 மார்ச், 2011

ஸ்ரீரங்கம்: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக இளம் வேட்பாளர்


 திருச்சி:
 
           திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுபவர் திமுகவைச் சேர்ந்த- 30 வயதே நிரம்பிய இளம் வேட்பாளர் என். ஆனந்த். 
 
                ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, திமுக வேட்பாளர் யார் என்ற ஆவல் தொகுதிக்குள் எழுந்தது.  இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கத்தில் என். ஆனந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
 வேட்பாளர் வரலாறு :
 
                திமுக வேட்பாளர் ஆனந்த் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அல்லித்துறை ஊராட்சியைச் சேர்ந்த சாந்தாபுரத்தில் வசித்து வருபவர். இவரது 
 
பிறந்த தேதி: 
 
28.8.1981. 
 
பெற்றோர்:
 
          இவரது தந்தை நாகராஜன், தாய் பாப்பாத்தி. தி.மு.க. குடும்பம்.
 
 தொழில்
 
           பிரதான தொழில் விவசாயம். 
 
கட்சி பதவி :
 
            2002-ம் ஆண்டு முதல் சாந்தாபுரம் திமுக கிளையின் செயலராக இருந்து வருகிறார் ஆனந்த். 
 
படிப்பு :
 
பி.எஸ்ஸி., பட்டதாரி. 
 
மனைவி:
 
சௌம்யா .
 
குழந்தை :
 
ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. 
 
அனுபவம் :
             முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ஆனந்த், அதிமுக்கிய (விவிஐபி) வேட்பாளருடன் மோதுகிறார்.

Read more...

வியாழன், 17 மார்ச், 2011

ஸ்ரீரங்க சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா போட்டி - அதிகாரபூர்வ அறிவிப்பு

        2011 தமிழக சட்டமன்றத்  தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று  வெளியிடப்பட்டது.

           சட்டசபை தேர்தலில்‌ அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிகிறார்.  கடந்த சட்டசபை தேர்தலில் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.   இந்த தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் குவிந்தன.  இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.   ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP