அதிமுக கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் 234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்

           தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில், 245 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்

            .அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளில், 88 பேர் கோடீஸ்வரர்கள். தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளில், 14 பேர் கோடீஸ்வரர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, தலா, ஒரு கோடீஸ்வரர் களமிறக்கப்பட்டுள்ளார். தி.மு.க., போட்டியிடும், 119 தொகுதிகளில், 81 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் நிறுத்தியுள்ள, 63 வேட்பாளர்களில், 40 பேர் கோடீஸ்வரர்கள். பா.ம.க., நிறுத்தியுள்ள, 30 வேட்பாளர்களில், 12 பேரும், விடுதலைச் சிறுத்தைகளின், 10 வேட்பாளர்களில் இரண்டு பேரும் கோடீஸ்வரர்கள்

             கொ.மு.க., ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதில், ஆறு பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் சார்பில் ஒருவர், 133 கோடி சொத்தும், அ.தி.மு.க., அணியில் ஒருவர், 103 கோடி ரூபாய் சொத்தும், அதிகபட்சமாக கணக்கு காட்டியுள்ளனர். மிகக் குறைந்த தொகையாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்லபாண்டியன் 75 ஆயிரம் ரூபாய் ‌சொத்து கணக்கு காட்டியுள்ளார்.

Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

அவர் அத்தொகுதி மக்களுக்க் அளித்துள்ள வாக்குறுதிகள்:


1. உங்களது தொகுதியில் உங்களின் அன்பு சகோதரியாக நான் வேட்பாளராக இருக்கிறேன். எனது பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். நான் உங்களது உள்ளூர் பிரச்னையும் நன்கு அறிவேன்.

2. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும், விற்க முடியாத சூழலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். 


3.மழை காலங்களில் அடிக்கடி ஸ்ரீரங்கம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். சரிவர செயல்படுத்தாத மணிகண்டம் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

4. புங்கனூர், கள்ளிக்குடி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் துயரம் துடைக்கப்படும்.கோரையாறு, அரியாறு குறுக்கே பாலம் கட்டப்படும். புங்கனூர்-அல்லித்துறை இடையே அரியாறு பாலம் கட்டப்படும்.

5. உய்யக் கொண்டான் திருமலை- இனியானூர் சாலையில் பாலம் அமைக்கப்படும் இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களிடையே ஜெயலலிதா பேசியபோது, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும். என்று வாக்குறுதி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

Read more...

செவ்வாய், 29 மார்ச், 2011

அ..தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு


2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில்  அ.தி.மு.க.

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
 அ.தி.மு.க.  கூட்டணிபோட்டி 
 அ.தி.மு.க. 160
 தே.மு.தி.க. 41
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12
 இந்திய கம்யூனிஸ்ட் 10
 மனிதநேய மக்கள் கட்சி 3
 புதிய தமிழகம் கட்சி 2
 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 2
 அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் 1
 இந்திய குடியரசு கட்சி 1
 அகில இந்திய பார்வர்டு பிளாக்  1
 கொங்கு இளைஞர் பேரவை 1

Read more...

செவ்வாய், 15 மார்ச், 2011

307 கட்சிகள், அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு

             நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு 307 கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

              ஆதரவு அளிக்கும் கட்சிகள், அமைப்புகளின் பட்டியலை அதிமுக தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டது. பிரதான கூட்டணி கட்சிகள் தவிர, தமிழ் மாநில முஸ்லிம் லீக் (எஸ். ஷேக் தாவூத்), புதிய நீதிக்கட்சி (ஏ.சி. சண்முகம்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி (வேட்டவலம் கே. மணிகண்டன்) உள்பட ஏராளமான சிறிய கட்சிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

              நூற்றுக்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள், சங்கங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இத்தனை கட்சிகள்- அமைப்புகளின் தலைவர்கள் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்களா அல்லது கடிதம் மூலம் ஆதரவு தெரிவித்தார்களா என்ற விவரம் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

Read more...

வெள்ளி, 11 மார்ச், 2011

அதிமுக கூட்டணி: சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்




 










           நடைபெறவுள்ள  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி  ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

          தற்போது சமத்துவ மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம்பெறுகிறது. இதற்காக அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சமத்துவ மக்கள் கட்சி தொகுதி பங்கீட்டு குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்று  மாலை 3.30 மணியளவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்துப் பேசினார்.

             இச்சந்திப்பில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் இடம்பெறுவது குறித்தும், சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இச்சந்திப்புக்குப் பின்னர்  பேசிய சரத்குமார், 

              அகில இந்திய சமத்துவ கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு தொகுதிகள் எவை என்று ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.


Read more...

வியாழன், 10 மார்ச், 2011

அதிமுக கூட்டணி: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கட்சிக்கு 3 சீட்?



  

               
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் குதிக்கிறது. ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார் என்றும்,   இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதில் இருந்து 3 தொகுதிகள் விஜய் இயக்கத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வருகின்றன. இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.   ஜெயலலிதா “சீட்” ஒதுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            விஜய் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன என்றும், விஜய் அதற்கு சம்மதித்துள்ளதாகவும் தகவல் வருகின்றன.

Read more...

சனி, 19 பிப்ரவரி, 2011

புதிய சிக்கலில் அ.தி.மு.க

ஒரு வழியாக தி.மு.க கூட்டணியில் பாமகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதுவே அ.தி.மு.க.விற்கு புதிய சிக்கலினை   உருவாக்கியுள்ளது.  அ.தி.மு.க கூட்டணியில்  தேமுதிக இடம்பெற  50 தொகுதிகளாவது நிச்சயம் ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி உடன்பாடு ஏற்படும்.  பொறுத்திருந்து  பார்ப்போம் தமிழத்தின் விடிவுகாலம் யார் கையில் என்று !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Read more...

வெள்ளி, 22 அக்டோபர், 2010

அதிமுக அணியில் காங். வரும்: புதிய தமிழகம்

 அதிமுக அணியில் காங். வரும்: புதிய தமிழகம்



                  தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வரும் என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி,

                     தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மதுரையில் நடந்தது. வடமாவட்டங்களின் கூட்டம் நவம்பர் 10ல் விழுப்புரத்தில் நடக்கிறது. தேர்தலுக்கு முன் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முயற்சித்து வருகிறோம். 6வது மாநில மாநாடு விரைவில் நடக்க உள்ளது. மேலவை அமைப்பதற்கு அரசு முயற்சித்து வருகிறது. 

                    அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு கோரி வரும் நவம்பர் 15ல் கவர்னர் மாளிகைக்கு பேரணி செல்கிறோம். பட்டதாரி ஒதுக்கீடு என்பது 60 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது நடைமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 6 மாதமே எம்.எல்.ஏ.,பதவி கொண்டவர்கள் இன்னும் 6 ஆண்டுகளுக்கான மேலவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியாது.

                     இதனை எதிர்த்து புதிய தமிழகம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம். ஜனவரியில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கோரி போராட்டம் நடத்த உள்ளோம். அ.தி.மு.க.,கூட்டணியில் இன்னும் புதிய கட்சிகள் வர உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் காங்கிரஸ் கூட வரவாய்ப்புள்ளது என்றார். 

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP