அதிமுக கூட்டணி: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கட்சிக்கு 3 சீட்?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் குதிக்கிறது. ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார் என்றும், இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 3 தொகுதிகள் விஜய் இயக்கத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வருகின்றன. இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா “சீட்” ஒதுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன என்றும், விஜய் அதற்கு சம்மதித்துள்ளதாகவும் தகவல் வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக