தியாகராய நகரில் டிராபிக் ராமசாமி போட்டி

சென்னை தியாகராய நகரில் போட்டியிட டிராபிக் ராமசாமி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி, சிவசேனா கட்சி சார்பில் சதீஷ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக