தமிழக சட்டமன்றத் தேர்தல்: புரட்சி பாரதம் 40 தொகுதிகளில் தனித்துப் போட்டி

பூவை ஜெகன்மூர்த்தி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறினார்.இது குறித்து மேலும் அவர் கூறியது:சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 2 தொகுதிகள் கேட்டோம். ஆனால், ஒரு தொகுதி மட்டும் தருவதாகக் கூறினர்.
எனவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இருந்து திமுக சின்னத்தில் பூவை ஜெகன்மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக