அதிமுக கூட்டணி: சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்


நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம்பெறுகிறது. இதற்காக அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சமத்துவ மக்கள் கட்சி தொகுதி பங்கீட்டு குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்று மாலை 3.30 மணியளவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் இடம்பெறுவது குறித்தும், சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார்,
அகில இந்திய சமத்துவ கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு தொகுதிகள் எவை என்று ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக