வெளிநாடு வாழ் இந்தியர் ஓட்டளிப்பது எப்படி?
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது :
"வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) இந்த தேர்தலில் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாட்டில் வசிப்பவர், இந்திய பிரஜையாக இருந்து அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், எந்த நாட்டில் அவர் வசிக்கிறாரோ, அங்குள்ள இந்திய தூதரகத்தில் படிவம் 6ஏ-வை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் நுழைந்து `ஓவர்சீஸ் எலக்டார்ஸ்' என்பதை `கிளிக்' செய்தால் படிவம் 6ஏ கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி படிவம் 6ஏ-ல் கையெழுத்திட்டு கொடுப்பார். அதனை பெற்றுக் கொண்ட வாக்காளர், தனது சொந்த ஊர் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அந்த வாக்காளரின் முகவரிக்கு தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை சரிபார்ப்பார்கள். அதையடுத்து வெளிநாடு வாழ் இந்தியர் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார். ஓட்டுப் போடுவதற்கு அந்த வாக்காளர்கள் நேரில்தான் வர வேண்டும். தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக