விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்

திருச்சி கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழு மாநாடு, திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அக்டோபர் 10ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களை திரட்டி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் நிரூபிக்கும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கிகளை பெற்றுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதை ஏற்றுக்கொள்ள ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மறுக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியில் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் கட்சி திமுக, அதிமுகவுக்கு பிறகு மாற்று சக்தியாக ஊடகங்கள் தூக்கிப் பிடித்து வருகின்றன.
சமீபத்தில் சோலை என்கிற எழுத்தாளர் கட்டுரை எழுதியிருந்தார். அவர் முதிர்ந்த அரசியல் அதேபோல தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவர் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள். இப்படி மற்ற ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச் சிறுத்தைகளை ஏற்று கொள்ளாத நிலையிலும், தவிர்க்க முடியாமல் சிலர் பதிவு செய்கிறார்கள் என்றார்.

1 கருத்துகள்:
அவரு ரொம்ப நாளாவே நடிச்சிட்டிருக்காரு! நீங்க அப்புடியா?போன வருஷம் தானே நீங்க நடிக்க ஆரம்பிச்சீங்க?இலங்கைக்கு போயி நடிச்சு,அப்புறமா இந்தியாவுக்கு வந்து நடிச்சீங்க!ஒங்களுக்குச் சொல்லாமலே பிரதமர் கிட்ட போயி இலங்கைக்கு போனதப் பத்தி அறிக்கை வேற குடுத்தாங்க!அப்பயும் என்னமோ சாக்குப் போக்குச் சொல்லி நடிச்சீங்க!இப்ப கூட ஈழப் பிரச்சினயில என்னமோ புடுங்குறாப்பில நடிக்கிறீங்க!எலெக்சன் வருதில்ல?ஓட்டு எண்ணி முடிச்சப்புறம் பாப்போம்!வருஷா வருஷம் ஓட்டுப் போடுறவங்க கூடிக்கிட்டுத்தான் போவாங்க!இது கூட ஒங்களுக்குத் தெரியல! நீங்கல்லாம் ஜெயிச்சு.........................................!?
கருத்துரையிடுக