விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ். நேரில் வாழ்த்து: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றி எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேமுதிக தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 58வது பிறந்த நாளை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் கொண்டாடினார். மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார்.
இதையடுத்து அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது,
விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.
விஜயகாந்த் சிரித்துக்கொண்டே,
‘’இதுதான் பத்திரிகைகளூக்கு முக்கியச்செய்தியாக இருக்கப்போகிறது’’என்று கூறினார்.
ஈ.வி.கே.எஸ். சிரித்துக்கொண்டே,
‘’இது யாருக்கெல்லாம் கோபத்தை உண்டாக்கப்போகுதோ’’என்று கூறினார்.
திமுக,அதிமுக அல்லாத கூட்டணிக்கு தலைமையேற்கத்தயார் என்று விஜயகாந்த் கூறியிருக்கின்ற நேரத்தில், திமுக அரசைப்பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து விமர்சித்து வரும் நேரத்தில் இருவரும் நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய சென்னை, தென்சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏழைகளுக்கு வேட்டி சேலை, தையல் எந்திரம், 3 சக்கர வாகனம் வழங்கினார்கள். முக்கிய இந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் தே.மு.தி.க. தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். விஜயகாந்த் இன்று எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
2 கருத்துகள்:
Please add 49o option in the poll
நைனாவுக்கு நைனா பிறந்தநாள் வாழ்த்து சொன்னதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
கருத்துரையிடுக