எந்த கூட்டணியிலும் இல்லை: ராமதாஸ்

நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் தான் அதுபற்றி அறிவிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறீர்கள். பொறுப்பாளர்களும் நியமித்துள்ளீர்கள். இவர்கள் தான் தேர்தலில் நிற்பார்களா?
பதில்: அப்படி இல்லை. அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். பணியாற்றுவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: பா.ம.கவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்: இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட டாக்டர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை எடுத்து விடுவோம் என கூறி உள்ளார்.
கேள்வி: எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுத்துவிட்டீர்களா?
பதில்: கூட்டணி தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை . நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.
கேள்வி: சேலத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்கிறார்கள். ஆனால் அரசியல் தலையீடு உள்ளதா என பார்க்க சி.பி.ஐ.விசாரணை வேண்டும் என்கிறார்களே?
பதில்: சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை தெரியும்.
கேள்வி: பா.ம.க. வாக்கு வங்கி எப்படி உள்ளது?
பதில்: கூடி இருக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் சேர்ந்து வருகிறார்கள் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக