தி.மு.க - காங்., கூட்டணி நீடிக்காது: பா.ஜ., "ஆசை'

சென்னை:
""தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது,'' என, பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சர் இளங்கோவன், தி.மு.க.,வை கண்டபடி விமர்சிக்கிறார். இளங்கோவன் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் கருணாநிதி மனம் திறந்து அறிக்கை விட்ட பிறகும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் முதல்வரை இதுவரை சந்தித்து பேசவில்லை. ராகுல் நான்கு முறை தமிழகம் வந்தார். ஒரு முறை கூட கருணாநிதியை சந்திக்கவில்லை. இதிலிருந்தே தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்பது தெளிவாகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும். ராமதாஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், தமிழ் சமுதாயத்திற்கு அவர் துரோகம் செய்தது போலாகி விடும். முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே வழங்குகிறது. தற்போது படித்துக் கொண்டிருக்கும், அனைத்து முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவாக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக