புதன், 18 ஆகஸ்ட், 2010

அணி மாற்றத்துக்கு ​வாய்ப்பில்லை ​: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - நல்லகண்ணு

நாகர்கோவில்:

              தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் அரசியல் அணி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை.​ தமிழகத்தில் அதிமுகவுடன் உறவு நீடிக்கிறது ​ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.​ நல்லகண்ணு தெரிவித்தார்.​ ​​ ​ 

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.​ நல்லகண்ணு அளித்த பேட்டி:

              காங்கிரஸ், ​​ பாஜக அல்லாத கட்சிகளுடன் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.​ அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவுடன் உறவு நீடிக்கிறது.​ இந்த உறவு வரும் தேர்தலிலும் நீடிக்கும்.​ அரசியல் அணி மாற்றத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக முயற்சி மேற்கொண்டுள்ளோம்.​ ​ சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியலாக்கக் கூடாது.​ கணக்கெடுப்பை யதார்த்தமாக செய்யலாம்.​ தாழ்த்தப்பட்டவர்கள்,​​ பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய ஒதுக்கீடு,​​ சலுகைகளை அளிக்க வேண்டும்.​ ​ ​

                  தமிழகத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்கள் மற்றும் புதிய மின்மோட்டார்களுக்கு மானியம் என்று அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.​ அதேநேரத்தில் இலவசத்தையே கொள்கையாக வைத்திருப்பது நல்லதல்ல.​ ​​ ​ திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பனை தாக்கிய திமுக எம்.எல்.ஏ.​ மீது ​ வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.​ ஐ.ஏ.எஸ்.​ அதிகாரி உமாசங்கர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் நல்லகண்ணு.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP