விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் எது? திருமாவளவன் ஆலோசனை
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
வேளச்சேரியில் உள்ள தமிழ்மண் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம், சாதக பாதக வாய்ப்புகள், தனித் தொகுதி, பொதுத் தொகுதியாக எதை தேர்வு செய்யலாம் என அடையாளம் காண்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்திலும் தொகுதிகள் தேர்வு செய்வது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இது குறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியது
’’தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சியின் அங்கீகாரம் பெற 15 தொகுதிகள் தேவை என்பதால் நாங்கள் அவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை கணக்கில் கொண்டு கூட்டணியில் பிற கட்சிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.
அதனால் இத்தனை சீட்டுகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனால் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தொண்டர்கள் என்ன வேண்டாம். நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் நாம் என்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறலாம்.
4-ந் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதிலும் இன்று நடக்கின்ற தலைமை நிர்வாகிகள் கூட்டத்திலும் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 பொது தொகுதியில் விடுதலை சிறுத்தை போட்டியிடும். சென்னையிலும் தொகுதி கேட்க முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக