ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

2011 தமிழக சட்டசபை தேர்தல் : 11 லட்சம் புதிய வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்


             தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

             சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓட்டுப் போடச் செல்லும் வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பும் வழங்கப்படுகிறது.

             கடந்த ஜனவரி 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி மொத்தம் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 3 லட்சம் பேர் ஆண்கள். 2 கோடியே 28 லட்சம் பேர் பெண்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.

             11 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். திருவள்ளூரில் 1 லட்சம் புதிய வாக்காளர்களும், காஞ்சீபுரத்தில் 91 ஆயிரம் புதிய வாக்காளர்களும், மதுரையில் 65 ஆயிரம் புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP