வியாழன், 7 ஏப்ரல், 2011

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட 13 மாற்று ஆவணங்கள்

 கடைசி வரைக்கும் எங்களுக்கு புகைப்பட

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காது


           புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்கள், ஓட்டளிக்க 13 அடையாள ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

            தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பெரும்பாலான வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த முறை வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புகைப்பட அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' உள்ளவர்கள், அதை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

               வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம்பெறாதவர்கள் 60 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இவர்கள் மட்டும், மாற்று அடையாள ஆவணங்களைக் காண்பித்து ஓட்டு போடலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இ தன்படி, புகைப்பட வாக்காளர் பட்டியலில், புகைப்படம் இடம் பெறாதவர்கள், 13 வகையான ஆவணங்களைக் காண்பித்து ஓட்டு போடலாம்.

பாஸ்போர்ட், 
டிரைவிங் லைசென்ஸ், 
வருமான வரி பான் கார்டு,
மத்திய, மாநில, 
பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களது அடையாள அட்டை, 
பொதுத் துறை வங்கிகள்,
தபால் அலுவலகங்கள் அளித்துள்ள புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக், 
கிசான் பாஸ் புக், 
ஓய்வூதிய ஆவணங்கள், 
சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை,
பட்டா, 
பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், 
ஆதிதிராவிடர், 
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ், 
ஆயுத லைசென்ஸ்,
உடல் ஊனமுற்றோருக்கான சான்று,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட பணி அட்டை, 
மத்திய தொழிலாளர் அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீடு திட்ட அட்டை 

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.

               எனினும், இந்த ஆவணங்கள் அனைத்தும், இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் பெற்றிருக்க வேண்டும். மேலும், புகைப்படத்துடன் கூடிய ஆவணமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் இந்த ஆவணங்கள் இருந்தால், குடும்பத்தோடு வந்து அதை காண்பித்து மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போடலாம்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP