சட்டமன்றத் தொகுதி - சென்னை துறைமுகம்
சட்டமன்றத் தொகுதி - சென்னை துறைமுகம்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. 23-லிருந்து, 30 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்
2006 க. அன்பழகன் திமுக
2001 க. அன்பழகன் திமுக
1996 க. அன்பழகன் திமுக
1991 இடைத்தேர்தல் A. செல்வராசன் திமுக
1991 மு. கருணாநிதி திமுக
1989 மு. கருணாநிதி திமுக
1984 A. செல்வராசன் திமுக
1980 A. செல்வராசன் திமுக
1977 A. செல்வராசன் திமுக
Read more...
