கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா போட்டி

சென்னை

         தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இன்றோ அல்லது நாளையோ அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 
 
தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளும், 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகளும், 
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 தொகுதிகளும், 
 
மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், 
 
புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளும், 
 
அகில இந்திய பார்வர்டு பிளாக், 
 
இந்திய குடியரசு, 
 
மூவேந்தர் முன்னணி கழகம் 
 
               ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

               ம.தி.மு.க.வுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 28 நாட்களே உள்ளதால் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு விட்டு விரைவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களிடம் கடந்த 4-ந் தேதி முதல் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். ஸ்ரீரங்கம், கவுண்டம்பாளையம், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடவேண்டும் என்று ஏராளமான பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

                கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட போவதாக பரவலாக பேசப்படுகிறது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றியது. இது மட்டும் அல்லாமல் சமீபத்தில் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டம், பிரமாண்டமானதாகவும், எழுச்சி மிகுந்ததாகவும் அமைந்ததாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.

              எனவே, இந்த தேர்தலில் ஜெயலலிதா கோவை மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வேகமாக தயாராகி வருகிறது.  அநேகமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இதைதொடர்ந்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.    


Read more...

திங்கள், 7 மார்ச், 2011

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் கடும் போட்டி

           கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பெரிய தொகுதி கவுண்டம்பாளையம். இங்கு மொத்தம் 2 லட்சத்து 89,912 வாக்காளர்கள் உள்ளனர்.
 
             இதில் ஆண் வாக்காளர்கள் 1,47,112-ம் பெண் வாக்காளர்கள் 1,42,800 பேர்களும் உள்ளனர். முன்பு தொண்டாமுத்தூர் தொகுதியில் கவுண்டம் பாளையம் இடம் பெற்று இருந்தது. இப்போது கவுண்டம்பாளையம் புதிய தொதியாக உருவெடுத்துள்ளது. இத்தொகுதியில் பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காளப்பட்டி போன்ற பகுதிகள் உள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது.

              பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி கவுண்டம்பாளையம் தியாகராஜன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். நரசிம்மநாயக்கன்பாளை யம் பேரூராட்சி தலைவர் பத்மாலயா சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சாந்தாராம், பொதுக்குழு உறுப்பினர் பகவதி, ஆனைக்கட்டி சுரேந்திரன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், வெள்ளகிணறு பேரூராட்சி தலைவர் அருள்குமார், மகளிர் அணியை சேர்ந்த சாந்தாமணி,

               ரங்கநாயகி, கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் கே.எம். சுந்தரம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், கவுன்சிலர் நாகராஜ், துடியலூர் பேரூராட்சித் துணைத் தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளனர்.  சுமார் 40 பேருடன் சென்னை சென்றுள்ள முள்ளாள் அமைச்சர் கண்ணப்பனுடைய தீவிர விசுவாசியான வக்கீல் அறிவரசு தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மு.கண்ணப்பன் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என பணத்தை கட்டியுள்ளதோடு தனக்காகவும் பணத்தை கட்டியுள்ளார்.   அ.தி.மு.க. சார்பிலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்து விட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

               இக்கட்சி சார்பில் கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அருண்குமார், விளாங்குறிச்சி ஊராட்சி தலைவர் வி.சி.ஆறுக்குட்டி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வக்கீல் ராஜேந்திரன், சின்னசாமி, பன்னிமடை செல்வராஜன், 24 வீரபாண்டி விஜயன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தலைவர் ஜெயராம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவனூர் துரை சாமி, சண்முகம், பாசறை தேவராஜ் உள்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP