திங்கள், 7 மார்ச், 2011

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் கடும் போட்டி

           கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பெரிய தொகுதி கவுண்டம்பாளையம். இங்கு மொத்தம் 2 லட்சத்து 89,912 வாக்காளர்கள் உள்ளனர்.
 
             இதில் ஆண் வாக்காளர்கள் 1,47,112-ம் பெண் வாக்காளர்கள் 1,42,800 பேர்களும் உள்ளனர். முன்பு தொண்டாமுத்தூர் தொகுதியில் கவுண்டம் பாளையம் இடம் பெற்று இருந்தது. இப்போது கவுண்டம்பாளையம் புதிய தொதியாக உருவெடுத்துள்ளது. இத்தொகுதியில் பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காளப்பட்டி போன்ற பகுதிகள் உள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது.

              பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி கவுண்டம்பாளையம் தியாகராஜன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். நரசிம்மநாயக்கன்பாளை யம் பேரூராட்சி தலைவர் பத்மாலயா சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சாந்தாராம், பொதுக்குழு உறுப்பினர் பகவதி, ஆனைக்கட்டி சுரேந்திரன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், வெள்ளகிணறு பேரூராட்சி தலைவர் அருள்குமார், மகளிர் அணியை சேர்ந்த சாந்தாமணி,

               ரங்கநாயகி, கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் கே.எம். சுந்தரம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.வி.செல்வராஜ், கவுன்சிலர் நாகராஜ், துடியலூர் பேரூராட்சித் துணைத் தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளனர்.  சுமார் 40 பேருடன் சென்னை சென்றுள்ள முள்ளாள் அமைச்சர் கண்ணப்பனுடைய தீவிர விசுவாசியான வக்கீல் அறிவரசு தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மு.கண்ணப்பன் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என பணத்தை கட்டியுள்ளதோடு தனக்காகவும் பணத்தை கட்டியுள்ளார்.   அ.தி.மு.க. சார்பிலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்து விட்டு சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

               இக்கட்சி சார்பில் கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அருண்குமார், விளாங்குறிச்சி ஊராட்சி தலைவர் வி.சி.ஆறுக்குட்டி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வக்கீல் ராஜேந்திரன், சின்னசாமி, பன்னிமடை செல்வராஜன், 24 வீரபாண்டி விஜயன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய தலைவர் ஜெயராம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவனூர் துரை சாமி, சண்முகம், பாசறை தேவராஜ் உள்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP