திங்கள், 7 மார்ச், 2011

வீரபாண்டி ஆறுமுகம் சேலம் வடக்கு தொகுதியில் போட்டி?

             சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி), ஆத்தூர்(தனி), ஏற்காடு (பழங்குடியினர்), ஓமலூர்,மேட்டூர்,இடைப்பாடி, சங்ககி, சேலம்மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகள் உள்ளன.

               கடந்த முறை இருந்த சேலம் 1-வது தொகுதி மற்றும் சேலம் 2-வது தொகுதி, தாரமங்கலம், பனைமரத்துப்பட்டி,தலைவாசல் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்த சங்ககிரி சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

           கெங்கவல்லி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,சேலம் மேற்கு ஆகிய தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. கடந்த 2006- ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமு.க. கூட்டணியில் பா.ம.க. மேட்டூர், தாரமங்கலம், இடைப்பாடி, ஓமலூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

           இந்த முறை தாரமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு உள்ளதால் அதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை பா.ம.க. கேட்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. தி.மு.க. கடந்த முறை சேலம்2-வது தொகுதி, ஏற்காடு. வீரபாண்டி, தலைவாசல் பனைமரத்துப்பட்டி, ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தது.

                சேலம் 2-வது தொகுதியில் கடந்த முறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெற்றார். இந்த முறை அந்த தொகுதி சேலம் வடக்கு தொகுதியாக மாறி உள்ளதால் அந்த தொகுதியில்தான் அவர் போட்டியிடுவார் என்று தி.மு.க. வினர் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி சென்னை சென்று தி.மு.க. தலைமை கழகத்திடம் மனு கொடுத்து உள்ளனர்.

               இதனால் அவர் இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் வடக்கு தொகுதியில் மாநகராட்சி 6-வது டிவிசன் முதல் 16 வது டிவிசன் வரையும்,26-வது டிவிசன் முதல் 36-வது டிவிசன் வரையும் வார்டுகள் உள்ளன.  இது தவிர கன்னங்குறிச்சி, பகுதியும் இந்த தொகுதியில் உள்ளது. புளியம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி,அரூர்பட்டி,ராமிரெட்டிப்பட்டி, அரியம்பட்டி,செலவடை ஆகிய கிராமங்களும், காடையாம்பட்டி, மற்றும் ஓமலூரில் உள்ள சில கிராமங்களும் இந்த தொகுதியில் உள்ளன. அமைச்சர் போட்டியிடும் தொகுதி என்பதால் இந்த தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தி.மு.க.வினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

இது குறித்து தி.மு.கதொண்டர்கள்,

                அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து உள்ளோம். அவர் சேலம் மாவட்டத்திற்கு செய்த பணிகளை யாரும் மறக்க முடியாது.  சேலம் சூப்பர் ஸ்பெஷாவிட்டி மருத்துவமனை,சேலம் புதிய கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தகவல் தொழில் நுட்ப பூங்கா என்று அவர் செய்த பணிகளை பட்டியலிட்டு காட்டலாம். சேலம் மாவட்டத்தை சிறப்பான மாவட்டமாக அவர் மாற்றி இருக்கிறார். இதை எல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள் எனவே அவர் சேலம் வடக்கு தொகுதியில் வெற்றி பெற அயராது உழைப்போம் என்று  கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP