போளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பா.ம.க. விருப்பம்
திருவண்ணாமலை:
சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பா.ம.க. ஆலோசித்து வருகிறது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் பா.ம.க. போட்டியிட விரும்புகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரணமல்லூர் தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றது. தற்போது தொகுதி சீரமைப்பில் பெரணமல்லூர் தொகுதி கலைக்கப்பட்டு அதிலிருந்த 55 சதவீத பகுதி போளூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 45 சதவீதம் வந்தவாசி தொகுதியில் சேர்க்கப்பட்டது. இதனால் போளூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பா.ம.க. கருதுகிறது. மேலும் அங்கு வன்னியர்கள் அதிகம் இருப்பதால் போளூர் தொகுதியில் போட்டியிட பா.ம.க. விரும்புகிறது.
எனவே தி.மு.க.விடம் போளூர் தொகுதியை பா.ம.க. கேட்டு பெறும் என்று தெரிகிறது. போளூர் தொகுதியில் போட்டியிட மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜி.எஸ்.குமார், பெரணமல்லூர் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் சண்முக சுந்தரி ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். பா.ம.க. போளூர் தொகுதியை பெறும் பட்சத்தில் இவர்களில் ஒருவர் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. போளூர் பா.ம.க. நிர்வாகிகள் இத் தொகுதியை பெற வேண்டும் என்று மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக