செவ்வாய், 8 மார்ச், 2011

பா.ம.கவுடன் போட்டி போடும் மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்

சிதம்பரம்:

            தமிழகத்தில் பா.ம.க. போட்டியிடும் 31 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்திட மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் விரைவில் மாநில பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கும் என அச்சங்க மாநில நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்க மாநில நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கை

            வட  தமிழகத்தில் 120 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்ற வன்னியர் சமுதாயத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலும் புறக்கணித்து வருகிறது.  அண்மையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்தது.  புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த என்.ரங்கசாமியை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியது. 2011 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ரங்கசாமி தலைமையிலான கூட்டணிக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு தெரிவிக்கும்.  

            மத்திய அரசிலிருந்து திமுக விலகியது வரவேற்கத்தக்கது. வரும் தேர்தலில் பா.ம.க.வை நம்பி வன்னியர்கள் வாக்குகளை பெறலாம் என்ற நிலை திமுகவுக்கு மிகவும் பேரிழப்பாக அமையும். 31 தொகுதிகளிலும் பா.ம.க.வை வன்னியர் அமைப்பு கூட்டமைப்பினர் இணைந்து எதிர்ப்போம் என எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.



0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP