கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் :
கள்ளக்குறிச்சி (தனி)
தொகுதி எண் :
80
அறிமுகம் :
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 1952-ம் ஆண்டு இரட்டைமுறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1962-ல் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது. அதன் பிறகு 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், வடக்கனந்தல் பேருராட்சி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியங்கள் இடம்பெற்றிருந்தன.தற்போது தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சின்னசேலம் சட்டமன்ற பொது தொகுதி நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உருவாக்கப்பட்டது.
எல்லை :
இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகள், தியாகதுருகம் பேரூராட்சியின் 15 வார்டுகள், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நகராட்சி:
கள்ளக்குறிச்சி- 21 வார்டுகள்
பேரூராட்சிகள்:
தியாகதுருகம்- 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 102
கள்ளக்குறிச்சி ஒன்றியம்: (25)
எரவார், இந்திலி, க.மாமனந்தல், காட்டனந்தல், மாடூர், மலைக்கோட்டாலம், மேலூர், நீலமங்கலம், நிறைமதி, பெருமங்கலம், பெருவங்கூர், பொற்படாக்குறிச்சி, புக்கிரவாரி, சிறுமங்கலம், சிறுவங்கூர், சிறுவத்தூர், தச்சூர், தென்கீரனூர், வீ.பாளையம், வானவரெட்டி, வரதப்பனூர், வீரசோழபுரம், விளம்பார், வினைதீர்த்தாபுரம், தென்தொரசலூர்.
சின்னசேலம் ஒன்றியம்: (37)
வி.அளம்பலம், அம்மையகரம், அம்மகளத்தூர், அனுமனந்தல், பங்காரம், எலவடி, ஈரியூர், ஈசாந்தை, காளசமுத்திரம், கனியாமூர், காரனூர், கருந்தலாக்குறிச்சி, கருங்குழி, கூகையூர், குதிரைச்சசந்தல், குரால், வி.மாமாந்தூர், மட்டிகைக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம், நல்லாத்தூர், நமச்சிவாயபுரம், பாக்கம்பாடி, பெத்தானூர், பெத்தாசமுத்திரம், பூண்டி, ராயப்பனூர், ராயர்பாளையம், சடையம்பட்டு, செம்பாக்குறிச்சி, தாகம்தீர்த்தாபுரம், தென்சிறுவலூர், தோட்டப்பாடி, உலகங்காத்தான், உலகிய நல்லூர், வாசுதேவனூர்.
தியாகதுருகம் ஒன்றியம்: (38)
அசகளத்தூர், சின்னமாம்பட்டு, சித்தலூர், சித்தாத்தூர், எறஞ்சி, ஈயனூர், குருபீடபுரம், காச்சக்குடி, கண்டாச்சிமங்கலம், கனங்கூர், கொங்கராயபாளையம், கூந்தலூர், கொட்டையூர், குடியநல்லூர், கூத்தக்குடி, மடம், மேல்விழி, முடியனூர், நாகலூர், நின்னையூர், ஒகையூர், பானையங்கால், பொரசக்குறிச்சி, பிரிதிவிமங்கலம், சாத்தனூர், புதுஉச்சிமேடு, சிறுநாகலூர், திம்மலை, தியாகை, உடையநாச்சி, வடதொரசலூர், வாழவந்தான்குப்பம், வரஞ்சரம், வடபூண்டி, வேளாக்குறிச்சி, வேங்கைவாடி, விளக்கூர், விருகாவூர்.
ரிஷிவந்தியம் ஒன்றியம்: (2)
அந்தியூர், குன்னியூர்.
வாக்காளர்கள் :
ஆண் - 1,09,553
பெண் - 1,05,574
திருநங்கைகள் - 8
மொத்தம் - 2,15,135
வாக்குச்சாவடிகள் :
மொத்தம் 259
பொது 252,
துணை வாக்குச்சாவடி 1,
ஆண் 3,
பெண் 3
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
கோட்டாட்சியர் அ.ந.நாகபூஷ்ணராஜு : 9445000421
0 கருத்துகள்:
கருத்துரையிடுக