தமிழக சட்டமன்றத் தேர்தல் அலுவலர்களுக்கு "சிம்கார்டு' வினியோகம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மொபைல் "சிம்கார்டு'களை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. சட்டசபை தேர்தலை "பீகார் பார்முலா'வில் நடத்த, தேர்தல் கமிஷன் பல நடவடிக்கைகளை எடுக்கிறது. அவற்றில் பணம், பொருட்களை கொடுத்து ஓட்டு கேட்கும் கட்சியினரை பிடிக்க பறக்கும்படை, தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு என குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், அந்தந்த தொகுதியில் நடக்கும் விதிமீறல்களை உடனுக்குடன் கலெக்டர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு "மொபைலில்' தெரிவிக்க வசதியாக, ஒவ்வொரு அலுவலருக்கும் "சிம்கார்டு'களை தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ளது. கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர், பறக்கும்படை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு பி.எஸ்.என்.எல்., "சிம்'கார்டுகள் வழங்கப்படும். இது தவிர, தேர்தல் பார்வையாளர், அவரது உதவியாளருக்கும் இந்த சிம்கார்டு வழங்கப்படும். தமிழகத்திற்கு 75987 00001 முதல் 75987 61000 மொபல் எண் வீதம் 60 ஆயிரத்து 999 சிம்கார்டுகளை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக