234 தொகுதிகளிலும் பா.ஜ.கதனித்து போட்டி: பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் தனித்து நிறுத்தப்படுவர் என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் பேசிய மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தேர்தல் கமிஷன் ஏப்ரல் 13ல் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. எல்லோருடைய கருத்துக்களை கருத்தில் கொண்டதாக கமிஷன் அறிவித்தாலும் கூட, தமிழர்களின் இந்த கருத்துக்களை ஏன் கருத்தில் கொள்ளவில்லை? மார்ச், ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடக்கும். சித்திரை திருவிழா ஏப்ரலில் துவங்குகிறது. ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு நாள். இவற்றை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளாதது ஏன்? தேதியை, மே முதல் வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் தனித்து நிறுத்தப்படுவர். இது குறித்து சென்னையில் தேர்தல் குழு கூடி விருப்ப மனுக்களை பெற்று, வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும். அப்பட்டியல், டில்லியில் 10ம் தேதி கூடும் மேலிட குழுவிடம் வழங்கப்பட்டு, இறுதி செய்யப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக