வியாழன், 7 ஏப்ரல், 2011

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட 13 மாற்று ஆவணங்கள்

 கடைசி வரைக்கும் எங்களுக்கு புகைப்பட

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காது


           புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்கள், ஓட்டளிக்க 13 அடையாள ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

            தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பெரும்பாலான வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த முறை வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புகைப்பட அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' உள்ளவர்கள், அதை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

               வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம்பெறாதவர்கள் 60 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இவர்கள் மட்டும், மாற்று அடையாள ஆவணங்களைக் காண்பித்து ஓட்டு போடலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இ தன்படி, புகைப்பட வாக்காளர் பட்டியலில், புகைப்படம் இடம் பெறாதவர்கள், 13 வகையான ஆவணங்களைக் காண்பித்து ஓட்டு போடலாம்.

பாஸ்போர்ட், 
டிரைவிங் லைசென்ஸ், 
வருமான வரி பான் கார்டு,
மத்திய, மாநில, 
பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களது அடையாள அட்டை, 
பொதுத் துறை வங்கிகள்,
தபால் அலுவலகங்கள் அளித்துள்ள புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக், 
கிசான் பாஸ் புக், 
ஓய்வூதிய ஆவணங்கள், 
சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை,
பட்டா, 
பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், 
ஆதிதிராவிடர், 
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ், 
ஆயுத லைசென்ஸ்,
உடல் ஊனமுற்றோருக்கான சான்று,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட பணி அட்டை, 
மத்திய தொழிலாளர் அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீடு திட்ட அட்டை 

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.

               எனினும், இந்த ஆவணங்கள் அனைத்தும், இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்கு முன் பெற்றிருக்க வேண்டும். மேலும், புகைப்படத்துடன் கூடிய ஆவணமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் இந்த ஆவணங்கள் இருந்தால், குடும்பத்தோடு வந்து அதை காண்பித்து மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போடலாம்.

Read more...

புதன், 6 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011; போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிவாரியாக

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011;  போட்டியிடும் வேட்பாளர்கள்  ( ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள்) தொகுதிவாரியாக அறிய  இங்கே  பார்க்கவும் 


Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் சொத்து விபரங்கள்

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் 

சொத்து விபரங்கள்

Read more...

கும்மிடிபூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் சொத்து விபரங்கள்

கும்மிடிபூண்டி சட்டமன்றத் தொகுதி 

வேட்பாளர்கள் சொத்து விபரங்கள் 

    ASOKAN.G.pdf
    CHAKARAVARTHI SRIRAMAN.B.pdf
    ELUMALAI.S.pdf
    MUNIKRISHNAN.G.pdf
    RAJA.A.pdf
    SEKAR.C.H.pdf
    SEKAR.K.N.pdf
    SELVAKUMAR.R.pdf
    SHANMUGAM.P.pdf
    SRINIVASAN.D.pdf
    SUDHAKAR.M.pdf
    VELU.N.pdf
 

Read more...

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள்

             திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

             தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

           வாக்குப்பதிவின் போது முறை கேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. தொலைதொடர்பு வசதிகள் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வைத்து வாக்குப்பதிவை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

               இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து லேப்-டாப் கம்ப்யூட்டர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு கல்லூரி மாணவர்கள் தேர்தலில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 250 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலுக்கு 2 நாள் முன்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP