சட்டப் பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி? - சரத்குமார்

வள்ளியூர்:
சட்டப் பேரவைத் தேர்தலில் ச.ம.க.வை மதிப்பவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என அக் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில், வள்ளியூர் திருவள்ளுவர் திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழர்கள் வளமுடன் வாழ வேண்டும் என்பதுதான் சமகவின் நோக்கம். ஓட்டுப் போட்டவுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக பொதுமக்கள் நினைக்கக்கூடாது. சிலரை பதவியில் அமர்த்தி இருக்கிறீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இலவசம் என்பது எதற்காக என்பதையும் சிந்தியுங்கள். வரும் தேர்தலில் சமகவை மதிப்பவர்களுடன்தான் கூட்டணி. நாம் இல்லாமல் எந்த அணியும் வெற்றிபெற முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக