கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மார்ச், 2011

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மும்முனை போட்டி

நெய்வேலி:

        தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கடலூர் மாவட்டத்தில் இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, நெய்வேலித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.  

            கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம் தற்போது, பெரும்பாலான பண்ருட்டி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது.  மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதி நெய்வேலித் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 807.  

               இதில் 83 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 78 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.  இந்தத் தொகுதியில் உள்ள ஒரு சிறப்பம்சம், நெய்வேலித் தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு பராமரித்து வருவதால், தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை, நெய்வேலி நகருக்கென ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. 

             மேலும் பெரும்பாலானவர்கள் என்.எல்.சி. ஊழியர்களாக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினரை அதிக அளவில் யாரும் சந்திக்க வரமாட்டார்கள். எனவே சுலபமாக 5 ஆண்டுகளை கடத்திவிடலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்களிடையே நிலவுவதால் நெய்வேலித் தொகுதியை பெறுவதில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.  
 
            திமுக சார்பில் தற்போதைய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.ராஜேந்திரன், அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு அணியைச் சேர்ந்த சி.டி.மெய்யப்பன், சிதம்பரம் அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், பாமக சார்பில் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை எப்படியாவது பெற்றேத் தீரவேண்டும் என அந்தந்தக் கட்சித் தலைமையிடம் போராடி வருகின்றனர்.  

                 இது தவிர்த்து அந்த்ந்தக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை பெற்றுவிட முனைப்புக் காட்டுகின்றனர்.  ஒரே கூட்டணியில் உள்ள திமுகவும், பாமகவிற்கும் இடையே நெய்வேலியை பெறுவதில் மிகுந்த போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் பாமகவைச் சேர்ந்த வேல்முருகன் கடந்த 2 ஆண்டுகளாகவே நெய்வேலித் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.  ஆனால் திமுகவினரோ, நெய்வேலியே பாமக தவிர்த்து வேறு யாருக்கு ஒதுக்கினாலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகக் கூறிவருவதால் பாமகவினர் மிரட்சியாகக் காணப்படுகின்றனர்.

Read more...

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் : 

சிதம்பரம்

தொகுதி எண் :

158

அறிமுகம் : 

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

எல்லை : 

           தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி: 

சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்

பேரூராட்சிகள்: 

 கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் 
பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள்
அண்ணாமலைநகர் பேரூராட்சி - 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள்: 69 

மேல்புவனகிரி ஒன்றியம் (7) : 

      சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.

குமராட்சி ஒன்றியம்(21): 

             அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : 

         மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.

வாக்காளர்கள் : 

ஆண் -   94,192 
பெண்  -    92,427  
மொத்தம்   -   1,86,619 

வாக்குச்சாவடிகள் :

மொத்தம்  215  

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்: 

கோட்டாட்சியர் எம்.இந்துமதி   : 94450 00425.

Read more...

திங்கள், 21 பிப்ரவரி, 2011

2006-ல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் - கடலூர் மாவட்டம்




 கடலூர் மாவட்டம் - 9 தொகுதிகள் 

தி.மு.க -3
அ.தி.மு.க - 2
வி.சி.க - 2
பா.ம.க - 1
தே.மு.தி.க - 1

1. சபா. ராஜேந்திரன் (தி.மு.க.): நெல்லிக்குப்பம்
2. கோ. அய்யப்பன் (தி.மு.க.): கடலூர்
3. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் (தி.மு.க.): குறிஞ்சிப்பாடி
4. செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.): புவனகிரி
5. அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.): சிதம்பரம்
6. ஜி. வேல்முருகன் (பா.ம.க.): பண்ருட்டி
7. செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்) : மங்களூர்
8. ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்): காட்டுமன்னார்கோயில்
9. விஜயகாந்த் (தே.மு.தி.க.): விருத்தாசலம்

Read more...

புதன், 25 ஆகஸ்ட், 2010

விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி: தேமுதிக அறிவிப்பு

கடலூர்:

                   விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் கூறினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கடலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், செயல் வீரர்கள் கூட்டமும் செவ்வாய்க்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் பேசியது:

                 வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்தை ஆட்சியில் அமர்த்துவோம். குறிப்பிட்ட ஜாதி கட்சிகளுக்கு மட்டும்தான் வாக்குகள் கிடைக்கும் என்று பேசப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே இந்த மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தேமுதிக கூட்டணி வெற்றி பெறும்.

               தேமுதிகவினர் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து விஜயகாந்த் பிறந்தநாளுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். மற்ற கட்சியினர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து பேனர்களை வைத்து வருகிறார்கள் என்றார் சுதீஷ். 200 ஏழைப் பெண்களுக்கு சேலைகள், மாணவர்களுக்கு 1000 நோட்டுப் புத்தகங்கள், இருவருக்கு 3 சக்கர வண்டிகள் ஆகியவற்றை சுதீஷ் வழங்கினார். விழாவுக்கு தேமுதிக வடக்கு மாவட்டச் செயலர் பி.சிவக்கொழுந்து தலைமை வகித்தார். மாநில விவசாயத் தொழிலாளர் பிரிவு செயலர் வி.சி.சண்மும் வரவேற்றார். தெற்கு மாவட்டச் செயலர் உமாநாத், கடலூர் நகரச் செயலர் ஏ.ஜி.தட்சணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

புதன், 11 ஆகஸ்ட், 2010

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் - கடலூர் மாவட்டம்


கடலூர் மாவட்டம்

 

தொகுதி சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள்


நெல்லிக்குப்பம்
கடலூர்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
காட்டுமன்னார்கோயில்
சிதம்பரம்
விருத்தாச்சலம்
மங்களூர்


தொகுதி சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்

கடலூர்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
காட்டுமன்னார்கோயில் (தனி)
சிதம்பரம்
விருத்தாச்சலம்
திட்டக்குடி (தனி)
நெய்வேலி


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP