வியாழன், 10 மார்ச், 2011

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் கருணாநிதி போட்டி

               தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை கருணாநிதி  இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

              முதல்- அமைச்சர் கருணாநிதி கடந்த 2006 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

              திருவாரூரில் முதல்- அமைச்சர் கருணாநிதி போட்டியிட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தீர்மானம்போட்டு வலியுறுத்தி வருகிறார்கள்.   
 
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டிகலைச்செல்வன் கூறியது:-
 
              முதல்- அமைச்சர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 40க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற யாரும் இத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளிக்கவில்லை. கட்சியினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகத்துக்காக அதிக சாதனைகள் செய்த தலைவர் திருவாரூர் தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்று சாதனைபடைப்பார். இவ்வாறு அவர் கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுவதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
 
இதுவரை தமிழக சட்டசபை தேர்தல்களில் முதல்- அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகள் விவரம்
 
1957- குளித்தலை
1962- தஞ்சை
1967, மற்றும் 1971 அண்ணாநகர்,
1977 மற்றும் 1980 துறைமுகம் 
1984,1991-துறைமுகம்
1996, 2001, 2006- சேப்பாக்கம் 
 
                இதுவரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாகியுள்ளார். 5 முறை முதல்- அமைச்சராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்:

ராஜ நடராஜன் 10 மார்ச், 2011 அன்று 11:31 AM  

சென்னையில் நின்றால் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டுமென்று இப்போதே தெரிந்து விட்டதாக்கும்:)

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP