தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடங்கள்
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் அதிமுக முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று தேமுதிக தலைவர் போயஸ் தோட்டத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சந்திப்பின் போது தொகுதி குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொகுதி உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக