சனி, 5 மார்ச், 2011

பெரம்பலூர் குன்னம் தொகுதிகளில் 537 வாக்குச்சாவடிகள்

          பெரம்பலூர் குன்னம் தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கு 537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று கலெக்டர் விஜயகுமார் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் விஜயகுமார் கூறியது,

                பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி (தனி 147) குன்னம் (148) ஆகிய 2 தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் சட்ட மன்றத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 25ஆயிரத்து 205 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 489 ஆண்கள், ஒரு லட்சத்து 14ஆயிரத்து 709 பேர் பெண்கள். 7 பேர் அர வாணிகள்.

                 குன்னம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 10ஆயிரத்து 210 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 791 பேர் ஆண்கள், ஒருலட்சத்து 6 ஆயிரத்து 421 பேர் பெண்கள். 7 பேர் அரவாணிகள். பெரம்பலூர் சட்டமன்றத்தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டமன்றத்தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 537 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட உள்ளது.

                  சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம், பெரம் பலூர் தனலட்சுமிசீனிவாசன் கல்லூரி வளாகத்தில் தனித் தனி கட்டிடத்தில் அமைக்கப் பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்  19.3.2011, வேட்பு மனு கடைசிநாள்   26.3.2011, வேட்பு மனு பரி சீலனை  28.3.2011, வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்  30.3.2011. வாக்குபதிவு நாள்   13.4.2011, வாக்கு எண் ணிக்கை   13.5.2011 அன்று நடைபெறும்.

                      வேட்பு மனுதாக்கல் தொடங்குவதற்கு 10 நாட்கள் முந்திய தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட முடியும். குன்னம் (முந்தைய வரகூர்) தொகுதியில் இருந்த சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக் குளம், இரூர், பாடாலூர் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராமங்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

                    தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 609 உள்ளூர் போலீ சார் அமர்த்தப்பட உள்ளனர். மத்திய ராணுவத்தில் இருந்து ஆயிரத்து 879 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருகை தர உள்ளனர். சட்டமன்றத் தேர்தலை எந்தவித அசம்பா விதமும் இன்றி நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி 2 தொகு திகளிலும் தேர்தல் நடைமுறை விதிகளை சிறப்பாக செயல் படுத்தும் வகையில் தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய செயல்களை வீடியோ பதிவு செய்யும் குழு, வீடியோ பதிவு களை பார்வையிட்டு உரிய அலுவலர்களுக்கு அனுப்பும் குழு, தேர்தல் செலவுகளை கணக்கிடும் குழு, பறக்கும் படைக்குழு, நிலையான சோதனையிடும் குழு என 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது.

                   மேலும் முதுநிலை அலுவலர் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் தகவல் மையம் டோல்பிரி தொலைபேசி எண்ணுடன் அமைக்கப்பட உள்ளது. வேட் பாளர் ஒருவர் ரூ.16 லட்சம் வரை தேர்தல் செலவு செய்திட தேர்தல் ஆணையம் அனு மதித்துள்ளது. வேட்பாளர் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி தேர்தல் செலவு களை காசோலை மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய் திட முடியும். சிறிய தொகைகள் ரொக்கமாக பட்டுவாடா செய்யலாம். தேர்தல் செலவு குறித்த கணக்குகளை 3 நாட்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.

            மற்ற தேர்தல்களைவிட இந்த தேர்தல் மிகச்சிறப்பாக அமையும். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி யாளர்கள் 2ஆயிரத்து 598 பேர் நியமனம் செய்யப் பட் டுள்ளனர். மேலும் கூடுதலாக ஆயிரத்து 600 பேர் தேர்தல் பணிக்காக ஆயத்த நிலையில் உள்ளனர் என்றார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP