சனி, 5 மார்ச், 2011

விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதா போட்டி?


               
            அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. போட்டியிட உள்ள தொகுதிகள் எவை- எவை என்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

                தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான தே.மு.தி.க.வினர் சென்னை வந்து விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்பட தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்கனவே மனு கொடுத்து விட்டனர். அவர்கள் எந்தெந்த தொகுதியில் களம் இறங்குவார்கள் என்பதில் தொண்டர்களிடம் பலத்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

             இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தில் பிரேமலதாவை நிறுத்த அ.தி.மு.க.வும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP