புதன், 2 மார்ச், 2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

புதுதில்லி:

            தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

                தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த இரு மாதங்களில் முடிவடைகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து தேர்தலை ஆணையம் ஆய்வு செய்துள்ளது. தேர்தலை அமைதியாகவும்,நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுதில்லியில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

கூட்டத்துக்குப் பின்னர் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியது 

                தேர்தல் ஆணையர் குரேஷி இந்த ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். அசாமில் 2 கட்டமாக, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11ம் தேதிகளிலும், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களில் ஏப்-18, ஏப்-23, ஏப்-27, மே-3, மே-7, மே-10 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குகள் ஒட்டுமொத்தமாக மே 13ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கால நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வரும். 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி :

1. தேர்தலுக்கான முறையான அறிவிப்பு தேதி:  19.3.2011  (சனிக்கிழமை)
2. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாள் :  26.3.2011 (சனிக்கிழமை)
3. வேட்புமனு பரிசீலனை :  28.3.2011  (Monday)
4. வேட்புமனு திரும்பப் பெற்றுக்கொள்ளக் கடைசி நாள் : 30.3.2011 (புதன்கிழமை)
5.  தேர்தல் ::  வாக்குப் பதிவு நாள் :  13.4.2011 (புதன்கிழமை)
6. வாக்குகள் எண்ணிக்கை : 13.5.2011 (வெள்ளிக்கிழமை)
7. தேர்தல் நடைமுறைகள் முடிக்க வேண்டிய நாள் : 16.5.2011 (திங்கள்கிழமை)

*****234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் (ஒரே கட்டமாக) தேர்தல் நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP